ஜனநாயகன் படத்திற்கு கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த சென்சார் போர்டு! திக்குமுக்காடிய படக்குழு..

Jana Nayagan CBFCScreening Cancelled : விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் பிரச்சனை பல நாட்கள் கடந்தும் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Mar 9, 2026, 11:26 AM IST
  • ஜனநாயகன் படத்திற்கு கடைசி நேர ட்விஸ்ட்..
  • சென்சார் போர்ட் செய்த விஷயம்..
  • முழு விவரம்..இதோ
ஜனநாயகன் படத்திற்கு கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த சென்சார் போர்டு! திக்குமுக்காடிய படக்குழு..

Jana Nayagan CBFCScreening Cancelled : அரசியலில் நுழைவதற்கு முன்பு, விஜய் கடைசியாக நடித்திருந்த படம் ஜனநாயகன்.  இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதிலும், ரிலீஸ் ஆவதிலும் தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருகிறது. இதை எடுத்து புதிதாக சென்சார் போர்டு ஒரு  பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

ஜனநாயகன் பிரச்சனை: 

விஜய்யின் பல படங்கள் பிரச்சனைகளை சந்தித்து இருக்கின்றன. ஆனால் ரிலீஸ் தேதிக்கு முன்பு கடைசி நேரத்தில் எப்படியாவது இந்த பிரச்சனைகள் தீர்ந்துவிடும். படமும் நேரத்திற்கு ரிலீஸ் ஆகிவிடும். தலைவா போன்ற படங்கள் அதற்கு விதிவிலக்காக அமைந்திருக்கின்றன. ஆனால் இந்த படத்திற்கு இல்லாமல் அவரது கடைசி படத்திற்கு பெரும் சோதனை, சென்சார் போர்டு ரூபத்தில் வந்தது. 

இந்த வருடத்தின் பொங்கல் பண்டிகையொட்டி, ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தான் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழே வழங்கப்படவில்லை என்பது தெரிந்தது. இருப்பினும், எப்படியாவது சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்கிற நோக்கில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முதலில், சென்சார் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வர, சென்சார் சான்றிதழ் தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டு அந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்தது.

உச்ச நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் மாறி மாறி படக்குழு பெட்டீஷன் போட்டதை தொடர்ந்து, இறுதியில், “இப்படியே போனால் படத்தை ரிலீஸ் செய்வதில் இழுபறி ஏற்படும் என்பது தெரிந்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாங்கள் கொடுத்த மனுவை படக்குழு திரும்ப பெற்றது.

தொடரும் சிக்கல்…

ஜனநாயகன் திரைப்படத்தை, மறு தணிக்கை செய்ய வேண்டும் என்பது, சென்சார் போர்டின் வாதமாக இருந்தது. அதற்கு பல நாட்கள் பிடிக்கும் என்பதால்தான், கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் மனு தாக்கலே செய்திருந்தது. இறுதியில், அந்த மனு வாபஸ் பெறப்பட்ட நிலையில், படம் கண்டிப்பாக மறு தணிக்கைக்கு செல்வது என்று முடிவாகி விட்டது. இதற்காக சென்சார் குழு, தனியாக குழு அமைத்து, படத்தை அவர்களுக்கு மார்ச் 9ஆம் தேதியான இன்று மதியம் 2 மணிக்கு ஸ்கிரீன் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதிலும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று எழுந்திருக்கிறது. 

எதிர்பாராத ட்விஸ்ட்..

சென்சார் போர்டுக்கு இன்று படம் திரையிடப்படுவதாக இருந்த நிலையில், அந்த திரையிடல் கேன்சல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்க்க இருந்த சென்சார் குழுவில் இருந்த ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், இன்று திரையிடல் கேன்சல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த திரையிடல் தேதி என்ன?

தற்போது, மறு தணிக்கை செய்ய வேண்டிய நிலையில் திரையிடல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாற்றப்பட்ட தேதி என்ன என்பது பெருங்கேள்வியாக எழுந்துள்ளது. படத்தை, வரும் மார்ச் 17ஆம் தேதி சென்சார் குழுவிற்கு திரையிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மார்ச் 19ஆம் தேதி, படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், இப்போது இந்த மாற்றமானது பலருக்கும் பேரதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு..

கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் ‘டாக்ஸிக்’ படத்தையும் தயாரித்திருந்தது. யாஷ் நடிக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போயுள்ளது. மார்ச் 19ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம், இஸ்ரேல் போர் சூழல் காரணமாக ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இரு படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாமல் கேவிஎன் நிறுவனம் திணறி வருகிறது.

தனது கடைசி படத்தில் நடித்து முடித்த பின்பு, விஜய் சூறாவளியாக சுழன்று தவெக அரசியல் பிரச்சாரத்தை செய்து வருகிறார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்களின் கருத்தும் இருக்கிறது. இதற்கிடையில், விஜய்-சங்கீதா விவாகரத்து, விஜய் - த்ரிஷா உறவு குறித்த சர்ச்சையும் தாெடர்ந்து எழுந்து வருகிறது.

மேலும் படிக்க | த்ரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பார்த்திபன் - என்ன சொன்னார் தெரியுமா?

மேலும் படிக்க | வரம்பு மீறிய பேச்சு.. பொங்கியெழுந்த திரிஷா: பார்த்திபனுக்கு 'குந்தவை' பதிலடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News