ஜனநாயகன் படத்திற்கு ஸ்கெட்ச் போட்ட சென்சார் போர்டு! உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..

Jana Nayagan Censor Board Files Caveat Petition : ஜனநாயகன் பட விவகாரத்தில், தணிக்கை வாரியம் படத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Jan 12, 2026, 05:48 PM IST
  • ஜனநாயகன் திரைப்பட விவகாரம்..
  • சென்சார் போர்டு செய்த காரியம்..
  • இதோ முழு விவரம்
ஜனநாயகன் படத்திற்கு ஸ்கெட்ச் போட்ட சென்சார் போர்டு! உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..

Jana Nayagan Censor Board Files Caveat Petition : விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவர இருந்த ஜனநாயகன் திரைப்படம், சென்சார் போர்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதனால், ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய படம், இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

கேவியட் மனுதாக்கல்!

விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்திருந்தது. இதையடுத்து படக்குழு உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தது. இந்த நிலையில், தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என சென்சார் போர்டு, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது. இதனால் படக்குழுவுக்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது.

ஜனநாயகன் பட விவகாரம்!

விஜய்யின் கடைசி படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களுள் ஒன்றாகும். இந்த படம், கடந்த ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. இருப்பினும், இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது பிரச்சனையை கிளப்பியது. காரணம், சென்சார் சான்றிதழ் இல்லாமல், இந்தியாவில் எந்த படத்தையும் திரையிடுவதற்கு அனுமதியில்லை. இதனால் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்காக அவசர வழக்கை, கேவிஎன் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது. இது குறித்து தனி நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே தணிக்கை வாரியம் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அன்று மாலையே இவ்வழக்கு விசாரணைக்கும் வந்தது. இதை விசாரித்த நீதிபதி அமர்வு, தணிக்கை வாரிய உறுப்பினர் எப்படி புகார் எழுப்ப முடியும்? என்று கேள்வி எழுப்பினர். பின்பு, தணிக்கை வாரிய தலைவருக்கு பதில் தர அவகாசம் தராமலேயே நீதிபதி எப்படி உத்தரவிட்டார்? எனவும், படத்தயாரிப்பாளர் பொய்யாக ஒரு அவகாசத்தை உருவாக்கி, சான்றிதழ் வழங்கக்கோரி நீதிமன்றத்திற்கு எப்படி அழுத்தம் தர முடியும்? என்றும் சரமாரி கேள்விகளை அடுக்கினார். சென்சார் சான்றிதழ் வழங்கும் முன்பே எப்படி படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்தது? என நீதிமன்றம் கேள்வி கேட்டதோடு தணிக்கை வாரிய குழுவின் உழுப்பினர் எப்படி புகார் செய்ய முடியும்? என்றும் கூறினார். நீதிமன்றத்திற்கு ஏன் அழுத்தம் தருகிறீர்களா? என நீதிபதி கேள்வி கேட்டதோடு, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையடுத்து படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கக்கோரி ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என்.ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதில், அனைத்து ஆவணங்களும் மனுதாரர் தரப்பில் சரியாக ஆவணங்கள் இருப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, சென்சார் போர்ட் தரப்பில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என கூறப்படுகிறது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News