Jana Nayagan Censor Issue Major Update : விஜய் நடிப்பில், ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்த படம், ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
ஜனநாயகன் பட விவகாரம்:
ஜனநாயகன் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் இல்லாமல் இந்தியாவின் எந்த படத்தையும் வெளியிட முடியாது என்கிற காரணத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவில் இருந்த ஒருவர், இதில் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலான வசனங்கள் இருப்பதாக கூறி, மேலிடத்தில் புகார் அளித்தார். ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க, கைக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததாலும், மறு ஆய்வுக்கு நேரம் இல்லாத காரணத்தினாலும் படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு உடனடியாக சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, உடனடியாக தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. இதன் விசாரணை நேற்று மாலை நடந்தது. அதில், தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து, படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது குறித்த விசாரணையை வரும் ஜனவரி 21ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி தலைமை அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
கிரீன் சிக்னல்!
கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம், எப்படியாவது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று தீர்க்கமாக உள்ளது. இந்த காரணத்தால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கும் வழக்கில், திங்கட்கிழமை இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென, டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வரும் திங்கட்கிழமையில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், கண்டிப்பாக படம் பொங்கலுக்கு முன் வெளியாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









