Jana Nayagan Movie Surprise Cameos : அரசியலில் விரைவில் களம் காண இருக்கும் நடிகர் விஜய், தற்போது தனது கடைசி மற்றும் 69வது படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருக்கும் ஒரு பெரிய சர்ப்ரைஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜன நாயகன் திரைப்படம்:
ஓராண்டுக்கு முன்னர், ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி, அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் விஜய். அரசியல் என்ட்ரி குறித்து அறிவித்த பாேதே, தான் கடைசியாக கமிட் ஆகியிருக்கும் படத்தில் நடித்து கொடுத்து விட்டு அரசியலில் முழு நேரமாக களம் காண இருப்பதாக கூறினார். அந்த கடைசி படம்தான், ஜன நாயகன்.
‘தளபதி 69’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தை இயக்க போவது யார் என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது. கடைசியில், ஹெச்.வினோத்தான் இந்த படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கடைசியில், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
விஜய்யுடன் நடனமாடும் 3 பேர்..
தமிழ் சினிமாவின் புது ட்ரெண்ட் என்ன தெரியுமா? எவ்வளவு பெரிய ஹீரோ ஒரு படத்தில் நடித்தாலும் அந்த படத்தின் ஒரு பாட்டில் ஏதாவது ஒரு பிரபலத்தை நடனமாட வைப்பதுதான். அந்த வகையில், விஜய் கடைசியாக நடித்திருந்த ‘தி காேட்’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷா நடனமாடியிருந்தார். இப்போதும், அதே போன்று ஜன நாயகன் திரைப்படத்தில் 3 பிரபலங்கள் அவருடன் நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த பிரபலங்கள், விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர்களும் கூட. அவர்கள் மூவருமே விஜய்யை வைத்து படம் இயக்கியவர்கள்.
யார் அந்த 3 பேர்?
அந்த 3 பேருமே இயக்குநர்கள். விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார், மாஸ்டர் மற்றும் லியோ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ மூவரும்தான் அவருடன் ஜன நாயகன் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் பட நடிகர்கள்:
ஜன நாயகன் படம் மூலம் இரண்டாம் முறையாக விஜய்யுடன் ஜோடி சேருகிறார், நடிகை பூஜா ஹெக்டே. இவர்கள் இருவரும் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மலையாளத்தில் பிரபல நடிகையாக விளங்கும் மமிதா பைஜுவும் இந்த படத்தில் நடிக்கிறார்.
வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். அனிமல் திரைப்படம் மூலம் பிரபலமான இவர், சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்திருந்தார். ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து பேசிய அவர், விஜய் பழக மிகவும் இயல்பானவர் என்றும் அனைவரிடமும் நட்பு பாராட்டக்கூடிய ஒருவர் என்றும் கூறியிருக்கிறார். இவர்கள் மட்டுமன்றி பிரியாமணி, நரேன், டீஜே அருணாச்சலம், உள்ளிட்டோரும் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | கூலி படத்தில் அமீர்கான் போல-ஜெயிலர் 2 படத்திலும் பாலிவுட் நடிகர்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









