Jana Nayagan Update Vijay Birthday : விஜய்யின் கடைசி படமாக இருக்கிறது, ஜன நாயகன். இந்த படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் அரசியலில் முழு நேரமாக இறங்க இருக்கிறார். இதையடுத்து, இவர் கடைசியாக நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
ஜனநாயகன் படம்:
அரசியல் எண்ட்ரிக்கு முன், விஜய் நடிக்கும் ஜன நாயகன் படம்தான், அவருக்கு கடைசி படமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தை, ஹெச்.வினோத் இயக்குகிறார். தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம், முதல் முறையாக தயாரிக்கும் தமிழ் படம், ஜனநாயகன். இந்த படம் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கியது.
ஜன நாயகன் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இவர், ஏற்கனவே அவருடன் பீஸ்ட் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். முக்கிய கதாப்பாத்திரமாக இந்த படத்தில் மமிதா பைஜு நடித்து வருகிறார். பிரேமலு படம் மூலம் பிரபலமான மலையாள நடிகையான மமிதா, இப்போது தமிழ் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கூடவே, நரேன், பிரியாமணி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் வருகின்றனர். இந்தி நடிகர் பாபி டியோல் இந்த படத்தில் வில்லனாக வருகிறார்.
அப்டேட்:
விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதியன்று, ஜன நாயகன் படத்தின் முதல் க்ளிம்ஸ் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சரியாக நள்ளிரவு 12 மணிக்கு இந்த பாடல் வெளியாகுமாம்.
A lion is always a lion
& his first roar is incomingJune 22 | 12.00 AM#JanaNayaganTheFirstRoar #JanaNayagan#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @Jagadishbliss… pic.twitter.com/a0PZ67R4MF
— KVN Productions (@KvnProductions) June 20, 2025
இந்த போஸ்டரில், “சிங்கத்தின் முதல் கர்ஜனை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் சிங்கிள் அல்லது படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாக இருக்கும் செய்தி, விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. இது, விஜய்க்கு நடிகராக கடைசி பிறந்தநாள் ஆகும். இது ஒரு வகையில் ரசிகர்களை சோகமாக்கினாலும், மீண்டும் விஜய் நடிக்க வருவார் என்கிற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது, அதன் பிறகு கொடைக்கானலில் நடைப்பெற்றது. விஜய், தன் பங்கு படப்பிடிப்பை முடித்து விட்டதாக கூறப்படுகிறது.
படம் எப்படியிக்கும்?
விஜய், 2026ஆம் ஆண்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜனநாயகன் படம் ஒரு அரசியல் த்ரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஜன நாயகன் படத்தில் 3 தோற்றங்களில் வரும் விஜய்! வைரலாகும் போட்டோஸ்..
மேலும் படிக்க | ஜன நாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ