விஜய் எப்படிப்பட்டவர்.. ஜன நாயகன் பட வில்லன் பகிர்ந்த சுவாரஸ்யம்!

Bobby Deol About Vijay: நடிகர் விஜய் குறித்து ஜன நாயகன் பட வில்லன் பாபி தியோல் சில சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Mar 9, 2025, 08:00 PM IST
  • சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பாபி தியோல்
  • நடிகர் விஜய் குறித்து பேச்சு
விஜய் எப்படிப்பட்டவர்.. ஜன நாயகன் பட வில்லன் பகிர்ந்த சுவாரஸ்யம்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தற்போது அவரது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அவர் முழு நேர அரசியலில் களம் இறங்க இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். இவர் அனிமல் மற்றும் கங்குவா படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமாகினார். 

Add Zee News as a Preferred Source

இப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் முடிய உள்ளது எனவும் படமானது வரும் அக்டோபர் மாதம் அல்லது 2026 பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற பாபி தியோல் விஜய் குறித்து சில சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார். 

மேலும் படிங்க: விஜய்யின் கடைசி படம்.. வெளியான 'ஜன நாயகன்' அப்டேட்!

அப்போது பேசிய அவர், விஜய் ஸ்வீர்ஹார்டாக இருக்கிறார். மிகவும் எளிமையான, தன்னடக்கமான மனிதர். அவருடன் வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புதிதான மற்றும் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் தமிழ் கங்குவா, தெலுங்கில் டாகு மகராஜ் போன்ற பிற மொழி படங்களில் நடித்திருந்தாலும் அங்கு மொழியை தவிர வேறு எதுவும் மாறவில்லை. 

கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்காக நிற்கிறார்கள். எனது எனது அப்பாவினால் எனக்கு இவ்வளவு அன்பு கிடைக்கிறது என நினைக்கிறேன். நான் எந்த விருது பெற்றாலும் அது ரசிகர்களுக்கானவை. ஓடிடி ஐபிஎல் போல, யார் வேண்டுமானாலும் எந்த அணியில் வேண்டுமானாலும் விளையாடலாம் எனத் தெரிவித்தார். 

யார் இந்த பாபி தியோல் 

பாலிவு நடிகர் தர்மேந்திராவின் இளைய மகன் பாபி தியோல். 1995ஆம் ஆண்டில் வெளியான பர்சாத் எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இவர் அறிமுகமானார். கடந்த 2020ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸில் வெளியான கிளாஸ் ஆப் 83 எனும் தொடரின்மூலம் டிஜிட்டல் உலகிற்கு அறிமுகமான இவர், ஆஷ்ரம் எனும் வலைத்தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்த ஆஷ்ரம் வலைத்தொடருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்ததால் 3வது சீசன் வரை அடியெடுத்து வைத்துள்ளது.  

மேலும் படிங்க: அஜித்தின் 'குட் பேட் அக்லி'.. புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News