)
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, தற்போது தமிழகத்தில் மாபெரும் அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார். கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களிலேயே தனிப்பெரும் அரசியல் சக்தியாக விஸ்வரூபம் எடுத்துள்ள விஜய், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளார். திமுக, அதிமுக போன்ற பாரம்பரியமான பெரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி தவெக முதலிடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் பலம் தேவை என்பதால், பிற கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ளார். அனைத்து தரப்பு ஆதரவும் கிடைத்து, விரைவில் தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்பார் என்று உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில், ஜோசப் விஜய் ஆகிய நான் என்று அவர் எப்போது பதவியேற்பார் என காண தொண்டர்களும், ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர்.
தவெக-வின் மாபெரும் வெற்றியுடன் தனது 33 வருட சினிமா பயணத்திற்கு விஜய் முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போதே தனது கடைசி படம் ஜனநாயகன் என்று அவர் அறிவித்திருந்தார். ஆனாலும், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு விஜய் மீண்டும் படங்களில் நடிப்பார் என்றும், அரசியலில் அவர் வெற்றிபெற போவதில்லை என்றும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி விஜய் தனிப்பெரும் அரசியல் வெற்றியை பெற்றுள்ளதால், இனி அவர் படங்களில் நடிக்கவே மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், அவரது கடைசி படமான ஜனநாயகன் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கிடையே, கடந்த சில நாட்களாக விஜய்யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து வருகின்றன. இந்த படத்தை யார் இயக்குவார், விஜய்யின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கினால் மிக சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விஜய்யின் கதாபாத்திரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் விரும்புகின்றனர். விஜய்யின் இளமை பருவ தோற்றத்திலேயே சஞ்சய் தற்போது உள்ளதால், மற்ற நடிகர்களைவிட அவரே விஜய்யாக திரையில் தோன்றினால் மிகவும் உண்மையாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். லண்டன் மற்றும் டொராண்டோ திரைப்பட பள்ளிகளில் இயக்குநருக்கான முறையான பயிற்சி பெற்ற சஞ்சய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தீப் கிஷன் நடிக்கும் சிக்மா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் பரபரப்புகள் முடிந்த பின்பு இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சய்க்கு நடிக்க பல வாய்ப்புகள் வந்தபோதிலும், முதலில் தான் ஒரு இயக்குநர் ஆக வேண்டும் என்ற உறுதியில் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த நிலையில், அவர் தனது தந்தை விஜய்யின் பயோபி திரைப்படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதமே திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பிரச்சினைகளால் தற்போது வரை வெளியாகவில்லை. தற்போது, விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதால் இனி இந்த படத்திற்கு சென்சார் போர்டில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வரவுள்ளதால், அந்த வாரத்தில் ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், படம் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
| படங்கள் | படத்தின் பெயர் | இயக்குனர் |
| விஜய்யின் முதல் படம் | நாளைய தீர்ப்பு | எஸ். ஏ. சந்திரசேகர் |
| விஜய்யின் 50வது படம் | சுறா | எஸ். பி. ராஜ்குமார் |
| விஜய்யின் கடைசி படம் | ஜனநாயகன் | வினோத் |
1. விஜய் எப்போது தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்?
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டணி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் விரைவில் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2. விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' எப்போது வெளியாகும்?
சென்சார் சான்றிதழ் பிரச்சினைகளால் தாமதமான 'ஜனநாயகன்' திரைப்படம், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவரது பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதியை ஒட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. விஜய்யின் பயோபிக் திரைப்படத்தில் யார் நடிக்க வாய்ப்புள்ளது?
விஜய்யின் பயோபிக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், விஜய்யின் இளமைப் பருவத் தோற்றத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இருப்பதால், அவரே அந்தப் படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.