Jason Sanjay Debut Film Title : தமிழ் திரையுலகில் புதுமுக இயக்குநராக இருப்பவர், ஜேசன் சஞ்சய். இவர் இயக்கியிருக்கும் முதல் படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
ஜேசன் சஞ்சய்யின் முதல் படம்!
விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், வெளிநாட்டில் திரைப்பட பயிற்சியை முடித்த பிறகு தமிழில் ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது, லைகா நிறுவனம் அவருக்கு கை கொடுத்தது. இந்த படத்தின் அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியானது. படம் ஆரம்பிக்க சிறிதளவு தாமதம் ஆனாலும், இப்போது முழு வீச்சில் இதற்கான வேலைகள் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
படத்தின் டைட்டில்:
ஜேசன் சஞ்சய் எடுக்கும் படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘SIGMA' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை, லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Presenting the Title of #JSJ01 - #SIGMA
The quest begins. @official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @Cinemainmygenes @krishnanvasant @Dir_sanjeev #BenjaminM @hariharalorven @ananth_designer @SureshChandraa @UrsVamsiShekar… pic.twitter.com/Dggm6zx3Il— Lyca Productions (@LycaProductions) November 10, 2025
இதில், இவருக்கு ஜோடியாக நடிப்பது யார் மற்றும் இப்படத்தில் அடுத்தடுத்து நடிப்பவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது கலையுலக திறன் எப்படியிருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னையில் இல்லையா?
ஜேசன் சஞ்சய், தற்போது சென்னையில் தங்கியில்லை என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பின் போது மட்டும் சென்னையில் இருப்பதாகவும் பிற நேரங்களில் லண்டனில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் அவர் விமான நிலையத்தில் இருந்த வீடியோவும் வைரலானது. அவர் முதல் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | விஜய் போலவே ரியாக்ஷன் கொடுத்த அவரது மகன்..வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









