கிடா சண்டையை வைத்து உருவாகியுள்ள ஜாக்கி! திரைவிமர்சனம் இதோ!

Jockey Movie Review Tamil : டாக்டர். பிரகாபால் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜாக்கி. யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Jan 23, 2026, 05:52 PM IST
  • கிடா சண்டையை வைத்து உருவான படம்
  • ரசிகர்களை கவர்ந்துள்ளது
  • ஜாக்கி படம் எப்படி?
கிடா சண்டையை வைத்து உருவாகியுள்ள ஜாக்கி! திரைவிமர்சனம் இதோ!

Jockey Movie Review Tamil : PK7 ஸ்டுடியோஸ் LLP சார்பில், பிரேமா கிருஷ்ணதாஸ் - சி தேவதாஸ் & ஜெயா தேவதாஸ் தயாரிப்பில் டாக்டர். பிரகாபால் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜாக்கி. இந்த படத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி,  காளி, மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பாத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங், சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். மதுரையின் பாரம்பரிய கிடா சண்டையை மையமாக வைத்து இந்த ஜாக்கி படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் விமர்சனம் இதோ.

Add Zee News as a Preferred Source

படத்தின் கதை

இந்திய சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில், மடி என்ற படத்தை இயக்கிய டாக்டர் பிரகபல், இயக்கத்தில் மதுரையின் பாரம்பரியமான கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ஜாக்கி. மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் கிடா சண்டை தான் படத்தின் மையக்கரு. படத்தின் கதாநாயகன் ராமர் ஆட்டோ ஓட்டுனர் ஆக உள்ளார். காளி என்ற அவரது கிடா களத்தில் இறங்கினால் மற்ற கிடாக்களை துவம்சம் செய்யும். மறுபுறம், படத்தின் வில்லன் கபரா கார்த்தி அணுகுண்டு என்ற கிடாவை வளர்த்து வருகிறார். அதுவும் சண்டை களத்தில் ராஜாவாக வலம் வருகிறது. இந்நிலையில் ஒரு போட்டியில் காளி, அணுகுண்டை தோற்கடிக்க, அது கௌரவ பிரச்சினையாக மாறுகிறது. இந்த தோல்வியால் ஆத்திரமடையும் கார்த்தி, ராமரின் குடும்பத்தையும், அவனது கிடாபையும் பழிவாங்க துடிக்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே ஜாக்கி படத்தின் கதை.

நடிகர்கள் நடிப்பு!

யுவன் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணா இருவருமே மதுரையை சேர்ந்த இளைஞர்களாகவும், கிடா வளர்ப்பாளர்களாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இவர்களின் ஆக்ரோஷமான நடிப்பை விட, களத்தில் மோதும் ஆடுகளின் நடிப்பு தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கதாநாயகியாக வரும் அம்மு அபிராமி, தனது வழக்கமான யதார்த்தமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார். மதுசூதன் ராவ் வழக்கமாக நடிக்கும் சண்டைகளை உருவாக்கும் கதாபாத்திரமாக இல்லாமல், சண்டைகளைத் தீர்த்து வைக்க முயற்சிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

தொழில்நுட்பம்

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமாரின் கேமரா, மதுரையின் புழுதி படிந்த மைதானங்களையும், கிடாக்கள் மோதும்போது காட்சிகளையும் மிக தத்ரூபமாக படமாக்கி உள்ளது. குறிப்பாக கிடா சண்டை காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் சிறப்பாக உள்ளது. சக்தி பாலாஜியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தின் காட்சிகளை மெருகேற்றுகின்றன. தமிழ் சினிமாவின் கிடா சண்டை வைத்து இதுவரை எந்த ஒரு படமும் வந்ததில்லை. அது இந்த படத்தை தனித்துவமாக்குகிறது. ஆடுகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான அழகான உறவை இயக்குனர் நன்றாக காட்சிப்படுத்தியுள்ளார்.  குறிப்பாக இடைவெளிக்கு முன்பு வரும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதம் மிகச் சிறப்பு. 

கதைக்களம் புதிதாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் வழக்கமான பழிவாங்கும் கதையாக மாறுவதால் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக காதல் காட்சிகள் கதையின் ஓட்டத்திற்கு பெரிதாக உதவாமல், இடையில் திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது. இயக்குநர் பிரகபல், மதுரை மண் சார்ந்த ஒரு கதையை தேர்ந்தெடுத்து, அதை முடிந்தவரை குறை இல்லாமல் படமாக்கியுள்ளார். பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் மண்வாசனை திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஜாக்கி ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

மேலும் படிக்க | விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்! என்ன காரணம்? பகிர்ந்த பிரபலம்..

மேலும் படிக்க | ரிலீஸ் ஆகாத ரஜினி படம்! 37 வருடங்களுக்கு பின் திரைக்கு வருகிறது..எது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News