Joy Crizildaa Clarification On Affirmation : மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார் கொடுத்ததை அடுத்து அவர்கள் இரண்டு பேரிடமும் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. சில நாட்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டாவிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது.
ரங்கராஜ்-ஜாய் பிரச்சனை:
ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததை ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியானது. மகளிர் ஆணையம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில், "ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததை மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணையின் போது ஒத்துக்கொண்டார். கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தையும் தன்னுடையதுதான் என்றும் அவர் ஒத்துக்கொண்டார்" என்று குறிப்பிட்டது.
ஆனால் பெரிய ட்விஸ்டாக மாதம்பட்டி ரங்கராஜ் அதனை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன்” என்று கூறியிருந்தார். மேலும், “ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று DNA Test மூலம் நிரூபித்தால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன். இந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன் செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை என்று ரங்கராஜ் கூறியுள்ளார்.
ஸ்ருதியின் அறிக்கை!
நிலைமை இப்படியிருக்கு, ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ஜாய் கிரிஸில்டா Affirmations-ஆக எழுதியுள்ள விஷயங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதில் ஜாய் “எனக்கு மாதம்பட்டி ரங்கராஜ் ரூ.8 லட்சத்தை மாதா மாதம் தர வேண்டும், எனக்கு அவர் இப்போதே ரூ.10 லட்சத்தை தர வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜாய் கிரிஸில்டாவின் நோக்கமே பணம் பறிப்பதும், குடும்பத்தை பிரிப்பதுதான் என்றும் தெரிவித்து இருந்தார்.
ஜாய் கிரிஸில்டா விளக்கம்:
ஜாய் கிரிஸில்டா, தற்போது அதற்கு விளக்கமளித்து இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். அதில், தன் வாழ்வில் என்னென்ன விஷயங்கள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறோனோ அதை நினைத்துதான் அதை எழுதியதாக தெரிவித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் 8 லட்சம் தர வேண்டும் என்று தான் எழுதியது, அவர் மூலம் தான் கடன் வாங்கிய தொகைதான் என்று கூறியிருக்கிறார்.
இரண்டு பெண்களை ஏமாற்றிய கணவர் பக்கம் நிற்பதை விட்டுவிட்டு, நியாயத்தின் பக்கம் நில்லுங்கள் என்றும் ஸ்ருதியிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.
டிஎன்ஏ பரிசோதனை:
டிஎன்ஏ பரிசோதனை செய்து குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூக்குத் தான் பிறந்தது என நிரூபிக்க தயார் என்றும், அவர், டிஎன்ஏ பரிசோதனை வேண்டாம் எனக் கூறிவிட்டு இப்போது சோதனைக்கு தயார் என அறிக்கை விடுகிறார். அதோடு என் குழந்தை அவருடைய குழந்தை இல்லை என சொல்ல நினைக்கிறார்கள் என்றும் மிரட்டி கல்யாணம் செய்தால் அவர் ஏன் சிரிக்கணும்? என்றும் குழந்தையின் சாபம் அவரை சும்மா விடாது என்றும் வேதனையுடன் பேசியுள்ளார். மேலும், மனசாட்சி இல்லையா ரங்கராஜுக்கு, குழந்தை இப்போது NICU-வில் துடிச்துக்கொண்டு உள்ளது, அவரது குடும்பத்தினர் கொடுத்த மன அழுத்தத்தில் தான் குறை பிரசவம் நடந்தது என்றும் கூறியுள்ளார்.
மகளிர் ஆணையம் முன்பு, குடும்பத்தினர் மிரட்டுவதாக கூறிய மாதம்பட்டி ரங்கராஜ் இப்போது மாற்றி பேசுவதாக வெளுத்து வாங்கியுள்ளார் ஜாய். இதற்கு நடுவே மகளிர் ஆணையமும் இவரை விளாசி உள்ளது. மகளிர் ஆணையத்தின் தலைவர் பேட்டி ஒன்றில், "ஆணையத்தில் ஆஜரான அன்று தனக்கு அந்தப் பெண்ணுடன் திருமணம் நடந்ததை அவர் ஒத்துக்கொண்டார். இப்போது இப்படி ஒரு அறிக்கையை அவர் ஏன் தருகிறார் என்பது தெரியவில்லை. மகளிர் ஆணையம் அதன் கடமையை சரியாக தான் செய்துள்ளது என்று பேசியுள்ளார்.
இப்படி இந்த சிக்கல் நீண்டுகொண்டே செல்கிறது. மாதம்பட்டி ரங்கராஜ் மாற்றி மாற்றி பேசுவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு இந்த பிரச்சனையில் அடுத்து என்ன நடக்கும்? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | “என் கணவருடன் உறுதியாக நிற்பேன்” மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதி பரபரப்பு அறிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









