)
Joy Crizildaa Madhampatty Rangaraj New Post : இணையத்தில் சமீப நாட்களாக வைரலாகி வந்தவர், மாதம்பட்டி ரங்கராஜ். ஏற்கனவே, ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர், தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா சர்ச்சை!
சமையல் கலைஞராகவும் நடிகராகவும் இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புது நடுவராக வந்து பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில், அவருக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர், ஜாய் கிரிஸில்டா. தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் 2023ஆம் ஆண்டு இறுதியில் திருமணம் ஆனதாகவும், தாங்கள் சென்னையில் இருக்கும் ஒரு வீட்டில் தங்கியிருந்ததாகவும் கூறியருந்தார். இப்போதுதான் கர்ப்பிணியாக இருப்பதாகவும், குழந்தையின் தந்தையான மாதம்பட்டி ரங்கராஜ் இதற்கு பொறுப்பேற்று கொள்ளாமல் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
ஜாய் கிரிஸில்டா, ஒரு நேர்காணலில் பேசிய போது தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் அடித்து துன்புறுத்தி இருப்பதாகவும், இதனால் தனக்கு காது கேட்கும் பிரச்சனை வந்ததாகவும் கூறியிருந்தார். அதே வேளையில், தனக்கும் அவருக்கும் உறவு இருந்ததற்கான அனைத்து சான்றுகளையும் வைத்திருப்பதாகவும் கூறினார்.
புது போட்டோ..
ஜாய் கிரிஸில்டா, காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல், மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். கூடவே, தனக்கும் தன் குழந்தைக்கும் ஏதேனும் ஆபத்து வந்தால், அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் காரணம் என்று கூறிவிட்டார். இவருக்கு, இன்னும் சில வாரங்களில் குழந்தையும் பிறக்க இருக்கிறது.
Hellooooooo Daddy @MadhampattyRR
— Joy Crizildaa (@joy_stylist) October 10, 2025
Arambikalama daddy ? Few weeks to go #arrivalofbabyraharangaraj
இப்படிக்கு உங்கள் வாரிசு - Madhampatty Raha Rangaraj #madhampattyrangaraj #fatherofthechild #babyraharangaraj #chefmadhampattyrangaraj pic.twitter.com/xLLABxynGb
தற்போது, ஜாய் கிரிஸில்டா புது புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது, அவர் மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்த பழைய புகைப்படம் ஆகும். இதன் கேப்ஷனில் அவர் பகிர்ந்திருக்கும் விஷயம்தான், பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
“Hellooooooo Daddy #madhampattyrangaraj Ready eh ? Arambikalama daddy ? Few weeks to go இப்படிக்கு உங்கள் வாரிசு - Madhampatty Raha Rangaraj” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்ன பிரச்சனை?
ஜாய் கிரிஸில்டாவின் நேர்காணலை வைத்து பார்க்கும் போது, மாதம்பட்டி ரங்கராஜ் அவருடன் உறவில் இருந்ததும், பின்னர் இப்போது கோஸ்ட் செய்திருப்பதும் தெரிந்தது. ஆரம்பத்தில் ‘குடும்பத்தை பிரித்தவள்’ என்று பெயர் வாங்கிய ஜாய் கிரிஸில்டா, இந்த நேர்காணலுக்கு பின்பு ‘பாதிக்கப்பட்ட பெண்’ ஆக மாறியிருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ், இன்னொரு பக்கம் ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட புகைப்படங்களால் தங்களின் மாதம்பட்டி பகாஷாலா நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்தார். இதற்கு சான்றுகள் தேவை என்று நீதிமன்றம் கேட்டதை அடுத்து, இந்த விஷயம் அமைதியானது. தன்னை பற்றி ஜாய் கிரிஸில்டா பதிவிடுவதை நிறுத்த வேண்டும் என்று ரங்கராஜ் கூறியிருந்தார். இதற்கும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. நிலைமை இப்படி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதியும் மெளனம் காத்து வருகிறார். இந்த பிரச்சனை எங்கு சென்று, எப்படி முடியும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ