)
Joy Crizildaa Posts Her Baby : மாதம்பட்டி ரங்கராஜ் மீது மோசடி புகார் கொடுத்துள்ள ஜாய் கிரிஸில்டா, தற்போது தனது குழந்தையின் புகைப்படத்தை அவருடன் ஒப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.
ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது:
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸிலடாவிற்கு, சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தனது சமூக வலைதளங்களில் அறிவிப்பாக வெளியிட்ட அவர், தன் குழந்தையின் பிறப்பு சான்றிதழையும் அடுத்ததாக பதிவிட்டார். அதில், மாதம்பட்டி ரங்கராஜை தந்தையாக குறிப்பிட்டிருந்த அவர், இதனை தான் மிகவும் மனம் நொந்து செய்வதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னர் கொடுத்திருந்த நேர்காணலில், தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் மிகவும் விருப்பப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதனால், பெண் குழந்தை பிறக்கும் என்று மிகவும் எதிர்பார்த்த இவருக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறக்கும் முன்பிருந்தே அவர் அதனை ‘ரஹா’ என்றுதான் குறிப்பிட்டு வருகிறார்.
குழந்தையின் புகைப்படம்:
ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதில், குழந்தையின் முகத்தை மறைத்து பதிவிட்டிருக்கும் அவர், “அவனது அப்பா போல அப்படியே போஸ் கொடுக்கிறான்” என்று குறிப்பிட்டு அருகிலேயே மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். இது, தற்போது வைரலாகி வருகிறது.
பராமரிப்பு செலவு:
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா கொடுத்துள்ள திருமண மோசடி புகாரின் விசாரணை, தற்போது நடந்து வருகிறது. இதில், தனக்கு பராமரிப்பு செலவாக ரூ.6,50,000 மாதாமாதம் மாதம்பட்டி ரங்கராஜ் வழங்க வேண்டும் என்பதை ஜாய் கிரிஸில்டா கோரிக்கையாக வைத்திருக்கிறார். இதற்குறிய அடுத்தடுத்த அப்டேட்கள், தொடர்ந்து வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ