)
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாலியிலும் ஜட்ஜாக இருந்து வருகிறார். மேலும், பல பிரபலங்களில் வீட்டு விசேஷங்களில் சமையல் செய்து வருகிறார். இந்த சூழலில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை கடந்த சில மாதங்களாகவே பேசும் பொருளாகி உள்ளது.
அதாவது மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகி விட்டது என்றும் தான் 6 மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸில்டா என்பவர் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. முதல் மனைவி ஸ்ருதி இருக்கையில் எப்படி மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து குழந்தையும் கொடுக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜின் காஸ்ட்யூம் டிசைனராக இருந்தவர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பின்னர் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டதாகவும் இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்ட பின்னர், ஜாய் கிரிஸில்டா திருமணம் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
https://x.com/joy_stylist/status/1957783748424134973
இதற்கிடையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஓர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது. இதுவும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், என்னுடைய கணவர் எடிட் செய்தது என ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ஜாய் கிரிஸில்டா. இது சோஷியல் மீடியாவையே அதிரச் செய்திருக்கிறது.
அந்த வீடியோ பல புகைப்படங்கள் கொண்டதாக இருக்கிறது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த போட்டோவும் உள்ளது. இதேபோல் அவர்கள் கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல அந்த வீடியோவில் இடம் பிடித்திருக்கிறது. இது தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் செய்து மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரப்போகிறது என்றும் விவாதித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ