)
Joy Crizildaa Shares Child Birth Certificate : ஜாய் கிரிஸில்டா-மாதம்பட்டி ரங்கராஜ் இடையேயான பிரச்சனை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழை அவர் தற்போது இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் Vs ஜாய் கிரிஸில்டா:
சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டதாக சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பதிவிட்டிருந்தார். கூடவே தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து, இதற்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல மாதம்பட்டி ரங்கராஜ் அமைதி காத்தார். ஒரு கட்டத்தில், தன்னை ஏமாற்றி மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டதாக ஜாய் கிரிஸில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மகளிர் ஆணைத்திலும் புகாரளித்தார். இதற்கான வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது.
ஜாய் கிரிஸில்டாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதற்கு பிறகு நடைப்பெற்ற விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தான்தான் குழந்தைக்கு தந்தை என்பதை ஒப்புக்கொண்டதாகவும் ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டதாகவும் மகளிர் ஆணையமும் ஜாய் கிரிஸில்டா தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே பெரிதாக அறிக்கையை வெளியிட்ட ரங்கராஜ், ஜாய்யுடனான இந்த திருமணம் வற்புறுத்தலின் பெயரில் நடந்தது என்றும், அந்த குழந்தை தன்னுடையதுதான் என்று DNA பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டால், தான் அந்த குழந்தையின் வாழ்நாள் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இது இன்னும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது.
குழந்தையின் பிறப்பு சான்றிதழ்:
ஜாய் கிரிஸில்டா, தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழை போட்டோ எடுத்து பதிவிட்டிருக்கிறார். அதில், தந்தை பெயர் என்கிற இடத்தில் ‘மாதம்பட்டி ரங்கராஜ்’ பெயரை குறிப்பிட்டிருக்கிறார். அந்த குழந்தையின் பெயர், ‘ரஹா ரங்கராஜ்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தை பிற்பிற்கு முன்னரே, இந்த குழந்தையின் பெயரை தனது பதிவுகள் அனைத்திலும் ஜாய் குறிப்பிட்டு வந்தார். ஒரு நேர்காணலில், தனக்கு பெண் குழந்தை வேண்டுமென மாதம்பட்டி ரங்கராஜ் மிகவும் விருப்பப்பட்டதாகவும், அவரால் தனக்கு இருமுறை கருக்கலைப்பு நடந்திருப்பதாகவும் ஜாய் தெரிவித்திருந்தார்.
பணம் கேட்டதாக குற்றச்சாட்டு!
மாதம்பட்டி ரங்கராஜின் சட்டரீதியான மனைவி ஸ்ருதி, சில நாட்களுக்கு முன்பாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், அவர் ஜாய் கிரிஸில்டாவின் நாேக்கம் பணம் பறிப்பதாக இல்லை என்று அவர் கூறிக்கொண்டாலும், அதுதான் அவரது குறிக்கோளாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
“எனக்கு மாதம்பட்டி ரங்கராஜ் மாதம் 8 லட்சம் தர வேண்டும், இப்போதே அவரிடம் இருந்து 10 லட்சம் வேண்டும்” என்பது போன்ற விஷயங்களை, ஜாய் கைப்பட எழுதிய பேப்பரின் புகைப்படத்தை ஸ்ருதி வெளியிட்டிருந்தார். மேலும், அவர் தனக்கு அனுப்பிய சில மெசஜ்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கு விளக்கமளித்த ஜாய், அது தான் Manifestation-ற்காக எழுதிய ஜர்னல் என்றும், “எனக்கு பணம் தேவை என்பதை என் புருஷனிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன்?” என்றும் கேட்டிருந்தார்.
ஜாய் பக்கம் திரும்பிய மக்கள்:
இந்த விவகாரத்தில், ஆரம்பத்தில் ஜாய்க்கு எதிராக இருந்த மக்கள், இப்போது ஸ்ருதி மற்றும் ரங்கராஜையும் கேள்வி கேட்டு வருகின்றனர். பிரசவத்திற்கும் முன்பும், பிரசவம் முடிந்தும் ஜாய் கிரிஸில்டா இந்த சட்டப்போராட்டத்தை எதிர்கொள்ளும் விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜும் ஸ்ருதியும் பேசியே ஆக வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ