)
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இப்படத்தை தொடர்ந்து பென்குயில் படத்திலும் நடித்திருந்தார். மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல் நிபுணரும் கூட. பல்வேறு சினிமா பிரபலங்களின் விசேஷங்களுக்கு இவரது சமையல்தான். தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருக்கிறார். இதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.
இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது அவருடன் இருக்கும் புகைப்படங்கள் என பதிவிட்டு வந்தார். சமீபத்தில் கூட அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கொண்ட வீடியோ ஒன்றை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். இது அனைவரது மத்தியிலும் பேசும்பொருளாக மாறியது.
ரசிகர்கள் பலரும், மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெறாத நிலையில், எப்படி மற்றொரு பெண்ணை கர்ப்பமாக்க முடியும் எப்படி திருமணம் செய்துக்கொள்ள முடியும் என பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர். கடந்த சில மாதங்களாக இதுவே சமூக வலைத்தளத்தின் டாப்பிக்காக இருந்தது. இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார் என சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அவர் அளித்த புகார் மனுவில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார். சமீபத்தில் அவரது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த போட்டோ இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், அது குறித்து கேட்பதற்க்காக நான் அவர் நடுவராக இருக்கும் தனியார் தொலைக்காட்சி சென்றிருந்தேன். அப்போது அவர் என்னை தாக்கினார். அதன் பின்னர் எங்களுக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுக்கொண்டே இருந்தன.
தன்னை கோவிலில் வைத்து திருமணம் செய்துக்கொண்டு கர்ப்பமும் ஆக்கி என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என ஜாய் கிரிஸில்டா அந்த மனுவில் கூறி உள்ளார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளது. அவரது மனைவி ஸ்ருதி வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ