பிரசாந்த் நீல் இயக்கத்தில் என்டிஆர்! பிரமாண்ட படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர்.!

Written by - RK Spark | Last Updated : Apr 21, 2025, 02:03 PM IST
  • பிரசாந்த் நீல் இயக்கத்தில் என்டிஆர்.
  • ஏப்ரல் 22ம் தேதி படிப்பிடிப்பு தொடக்கம்.
  • அதிக எதிர்பார்ப்பில் படம் உள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் என்டிஆர்! பிரமாண்ட படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாகத் தொடங்கியது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு வாய்ஸ் கொடுத்த நடிகை! யார் தெரியுமா?

இதன் படப்பிடிப்பில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி என்.டி.ஆர். இணைகிறார். படப்பிடிப்புக்காக என்.டி.ஆர். ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்கிறார். என்.டி.ஆர். வருகையை படக்குழுவினரும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் பிரஷாந்த் நீல் இந்தப் புதிய படத்தில் என்.டி.ஆருக்கு இன்னும் அதிக மாஸ் சேர்க்க உள்ளார்.

மதிப்புமிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய திரை அனுபவத்தை கொடுக்கும். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கோசரராஜு ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக சலபதி பணிபுரிகிறார்.

தொழில்நுட்ப குழு:
தயாரிப்பு வடிவமைப்பு: சலபதி,
ஒளிப்பதிவாளர்: புவன் கவுடா,
இசை: ரவி பஸ்ரூர்,
தயாரிப்பாளர்கள்: கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கோசராஜு,
எழுத்து மற்றும் இயக்கம்: பிரசாந்த் நீல்

மேலும் படிக்க | சச்சின் படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோ ஆக வேண்டியவர்! இப்போ இறந்துட்டாரு..யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News