சூப்பர் டூப்பர் ஹிட் மெட்ராஸ் மேட்னி ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

சத்யராஜ் - காளி வெங்கட் நடித்த 'மெட்ராஸ் மேட்னி' ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 3, 2025, 09:50 PM IST
  • ஜூன் 6ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
  • திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி
சூப்பர் டூப்பர் ஹிட் மெட்ராஸ் மேட்னி ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Madras Matinee OTT Release Date: இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ' மெட்ராஸ் மேட்னி'. இந்த திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா,  மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். 

Add Zee News as a Preferred Source

இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொண்டது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கியது.

துப்பறியும் நாவல் எழுதும் எழுத்தாளரான சத்யராஜுக்கு, ஒரு பெண் மூலம் சாதாரண மக்கள் பற்றி எழுதுங்கள் அதுதான் பெரிய ரீச் கிடைக்கும் என ஒரு அறிவுரை வருகிறது. அதை ஏற்று கொண்ட சத்யராஜ், அது பற்றி கதையை தெரிந்து கொள்வதற்காக ஒரு பாருக்கு செல்கிறார். அப்போது ஆட்டேடோ ஓட்டுநரான காளி வெங்கட்டை சந்தித்து சத்தியராஜ் அவரிடம் கதையை கேட்கிறார். காளி வெங்கட் தனக்கு கிடைக்கும் சிறிய வருமனத்தை வைத்து தன் மகன், மகளை எப்படியாவது பெரிய ஆட்கள் ஆக வேண்டும் போராடுகிறார்.

காளி வெங்கட்டின் மகள் ரோஷினி ஒரு நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாயாது நம் பக்கத்தில் கொடுக்க வேண்டும் என காளி வெங்கட் நினைக்கிறார். அதே நேரத்தில் மகன் இஞ்ஜினியர் படிக்க வைக்கவும் பணம் வேண்டும் என வாழ்க்கையை நடத்த பல போராட்டமே நடத்துகிறார். குழந்தைகளுக்காக வாழ்க்கையை வாழ்ந்து வந்த காளி வெங்கட், ஏன் குடிக்க பாருக்கு வந்தார் என்பது தான் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் சுருக்கமான கதை.

இந்த படம் திரையரங்கில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படம், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் ஜூலை 4 ஆம் தேதி அதாவது நாளை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க | பிக் பாஸ் பிரபலம் திடீர் மரணம்! கடைசியாக போட்ட எமோஷனல் பதிவு..இணையத்தில் வைரல்

மேலும் படிக்க | Mahavatar Cinematic Universe: 7 திரைப்படம் ,1பிரபஞ்சம்-எல்லையற்ற புராணக் கதைகள்! 'மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News