)
Kaithi 2 Rumored To Be Dropped : சில படங்களையே இயக்கி இருந்தாலும், தற்போது டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம், கைதி. இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகுவதாக சொன்ன நிலையில், இப்போது அப்படத்தின் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கைதி 2 :
2019ஆம் ஆண்டு பிகில் படத்துடன் போட்டியிட்டு வெளியான படம், கைதி. மாநகரம் படத்தை இயக்கிய கையுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். ஒரே இரவில் நடக்கும் த்ரில்லிங் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. அவ்வப்பாேது எமோஷனல் பின்னணி இசை மட்டும் இருந்தது.
கைதி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். இப்படம், யாரும் எதிர்பார்க்காத வகையில் செம ஹிட் அடித்தது. இந்த படத்தில், தில்லி கதாப்பாத்திரம்தான் மெயின் கேரக்டர். இவருக்கும் ஏற்கனவே படத்தில் இருந்த அர்ஜுன் தாஸ் குரூப்புக்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பது போல படம் அப்போது முடிக்கப்பட்டிருந்தது. இதன் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு அப்போது எழுந்தது.
சொதப்பிய லோகேஷ்!
லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருந்த முதல் படம், கைதிதான். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சில கதாப்பாத்திரங்களும், கதையும் விக்ரம் படத்தில் தொடர்ந்தது. அப்படியே விஜய்யின் லியோ படமும் இதில் ஜாயின் ஆனது. கமல்ஹாசன் நடித்திருந்த இந்த படமும் பெரிய ஹிட் அடித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியான லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் கூலி படத்தை இயக்கியிருந்தார். ரஜினியை வைத்து முதன்முறையாக இயக்கியிருந்த இந்த படம், ரசிகர்கள் சிலருக்கு பெரிதாக பிடிக்கவில்லை. இதற்கு முன்னரே, அவருக்கு படம் எடுக்க தெரியவில்லை என்று சில சினிமா ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்ததை அடுத்து, இப்படத்தின் மூலம் அவர் எக்ஸ்போஸ் ஆகியிருப்பதாக கூறினர்.
படம் டிராப்பா?
லோகேஷ் கனகராஜ், கூலி படத்தை அடுத்து அமீர்கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார். அது, ஒரு சூப்பர் ஹீரோ கதையாக இருந்தது. கூலி படத்தில் அமீர்கான் ஒரு கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 10 நிமிடம் ஏதோ பயங்கர வில்லன் போல வந்துவிட்டு, கடைசியில் ரஜினியை பார்த்து “எப்படி இருக்கீங்கன்னா..?” என்ற டைலாக்கை பேசி விட்டு புஸ்வானம் ஆகி விட்டார். இதனால், இவர் லோகேஷ் உடன் கைக்கோர்க்க இருந்த அந்த படம், டிராப்பாகி விட்டதாக தகவல் வெளியானது. எல்சியு-விற்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் இந்த படம் டிராப் ஆனால், பின்பு அந்த யுனிவர்ஸிற்கு என்ன ஆகும் என்பதே தெரியவில்லை என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
அமீர்கானுடனான படத்தை தொடர்ந்து, கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்க இருக்கும் கைதி 2 படமும் டிராப் ஆனதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்கப்பூர்வமான கருத்து வேறுபாடுகள் (Creative Differences) காரணமாக இந்த படம் டிராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த படம் தாமதமாக கூட ஆரம்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் வாய் திறந்து கூறினால்தான் தெரியும். சமீபத்தில் தானும் கமலும் சேர்ந்து நடிக்கும் படத்திற்கான இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ