நடிகர் கலாபவன் மணி இறப்புக்கு காரணம் என்ன? சிபிஐ அறிக்கை
நடிகர் கலாபவன் மணியின் மரணம் தொடர்பாக விசாரித்து வந்த சிபிஐ, 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
நடிகர் கலாபவன் மணியின் மரணம் தொடர்பாக விசாரித்து வந்த சிபிஐ, 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி அவரது பண்ணை வீட்டில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரித்து வந்தது.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ, 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில்,
கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல எனவும், அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட கல்லீரல் நோயால் தான் தான் அவர் மரணத்தை தழுவியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.