மன்னிப்பு கேட்காத கமல்... Thug Life ரிலீஸ் ஒத்திவைப்பு - கர்நாடகா உயர் நீதிமன்றம் அதிரடி

Karnataka High Court: கர்நாடகாவில் Thug Life திரைப்படத்தின் வெளியீட்டை ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக கமல்ஹாசன் தரப்பு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 3, 2025, 04:07 PM IST
  • கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் - நீதிமன்றம்
  • தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும் - கமல்ஹாசன் தரப்பு
  • வழக்கு ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
மன்னிப்பு கேட்காத கமல்... Thug Life ரிலீஸ் ஒத்திவைப்பு - கர்நாடகா உயர் நீதிமன்றம் அதிரடி

Thug Life Movie Release Postponed: கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்த Thug Life திரைப்படத்தை பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. வரும் வியாழக்கிழமை (ஜூன் 5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. Thug Life திரைப்படத்தின் டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Add Zee News as a Preferred Source

Kamal Haasan: கமல்ஹாசன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

அந்த வகையில், Thug Life படத்தின் டிரைலரின் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, கன்னடம் தமிழில் இருந்துதான் பிறந்தது என கமல்ஹாசன் பேசியது கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பல கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனால் Thug Life படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்தது.

Kamal Haasan: மன்னிப்பு கேட்க கூறிய நீதிமன்றம்

இதனால், கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கமல்ஹாசனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று காலையில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நாகப்பிரச்சனா, மன்னிப்பு கேட்டாலே இந்த பிரச்னை முடிந்துவிடும், கமல்ஹாசன் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். மொழி குறித்து பேசுவதற்கு கமல் என்ன மொழியியல் வல்லுநரா அல்லது வரலாற்று ஆய்வாளரா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் வழக்கை மதியம் 2.30 மணிக்கு தள்ளிவைத்திருந்தார் நீதிபதி. 

Kamal Haasan: மன்னிப்பு கேட்க மறுத்த கமல்

இந்நிலையில், கமல்ஹாசன் கர்நாடக பிலீம் சேம்பருக்கு விளக்கக் கடிதத்தை அளித்திருந்தார். அதில் "தான் ஜாம்பவான் ராஜ்குமாரின் குடும்த்தினர் மீதான அன்பு குறித்தும், குறிப்பாக சிவ ராஜ்குமார் குறித்தும் பேசியிருந்தேன். எனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது" என்று கூறியிருந்தார். "நாம் அனைவரும் சமம் தான், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை எடுத்துக்கூறும் விதமாகவே நான் பேசியிருந்தேன்" என குறிப்பிட்டிருந்தார். 

Karanataka High Court: ஈகோவால் மன்னிப்பு கேட்க மறுக்குறீர்கள்...

இதையடுத்து, வழக்கு மதியம் விசாரணைக்கு வந்தபோது, கமல்ஹாசனின் கடிதம் திருப்திகரமாக இருந்தது என்றும் ஆனால் அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லையே என்றும் நீதிபதி தெரிவித்தார். அதற்கு கமல்ஹாசன் தரப்பு, "கமல்ஹாசன் கன்னட மொழி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார், இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டியதில்லை" என மன்னிப்பு கேட்க முடியாது என வாதிட்டது. அதற்கு உடனே நீதிபதி, "உங்களின் ஈகோ தான் இப்படி பேசுகிறது, அதனால்தான் மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள்" என சாடினார். அதற்கு கமல்ஹாசன் தரப்பு, "எங்களுக்கு இப்போது பாதுகாப்பு தேவையில்லை. ஏனெனில் நாங்கள் படத்தை இப்போது ரிலீஸ் செய்யப் போவதில்லை. நாங்கள் பிலீம் சேம்பருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்றார்.

Thug Life Movie Release: வழக்கு ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இதையடுத்து வழக்கு விசாரணையும் ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஜூன் 10ஆம்  தேதிவரை தக் லைஃப் திரைப்பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கமலின் பேச்சு மாநில மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ராஜ்கமல் நிறுவனம், கர்நாடகா அரசு மற்றும் கர்நாடக பிலீம் சேம்பருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் உத்தரவிட்டது. 

மேலும் படிக்க | “நான் வேதனையில் இருக்கிறேன்...” மொழி பிரச்சனையில் கமல் பரபரப்பு அறிக்கை!

மேலும் படிக்க | தக் லைஃப் படக்குழுவினரால் கடுப்பான மணிரத்னம்? காரணம் இதுதான்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News