கமல்ஹாசனின் தக் லைஃப்.. டிரெய்லர் ரிலீஸ் குறித்து முக்கிய தகவல்

Thug Life Trailer Date Announced: தக் லைஃப் படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து அதிரடி தகவல் கிடைத்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 15, 2025, 03:05 PM IST
  • தக் லைஃப் படத்தின் டைட்டில் டீசர்
  • ‘ஜிங்குச்சா’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
  • தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி
கமல்ஹாசனின் தக் லைஃப்.. டிரெய்லர் ரிலீஸ் குறித்து முக்கிய தகவல்

Kamala Haasan Thug Life Trailer Date Announced: கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மணிரத்னம் - கமல்ஹாசன் (Kamal Haasan) இருவரும் 38 ஆண்டுகளுக்கு பின்பு இணைந்து பணிபுரியும் படம், தக் லைஃப். இது தமிழில் உருவாகி வரும் கேங்க்ஸ்டர் ட்ராமா படம். 38 ஆண்டுகளுக்கு முன்பு நாயகன் படத்தில் முதல் தடவையாக கைக்கோர்த்த இயக்குநர் மணிரத்னமும்-கமல்ஹாசனும் அதன் பிறகு எந்த படத்திலும் ஒன்றாக பணிபுரியவில்லை. அவர்களால் இப்போது தக் லைஃப் படம் மூலமாகத்தான் கைக்கோர்க்க முடிந்தது. இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. 

தக் லைஃப் (Thug Life Trailer) படத்தின் டைட்டில் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடலான ‘ஜிங்குச்சா’ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் சிலம்பரசன், கமல்ஹாசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு, இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அன்றிலிருந்து இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளும் ஆரம்பித்து விட்டது. 

இதனிடையே ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ காரணமாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே 17 ஆம் தேதி ‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.

மேலும் வருகிற 24 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சாய்ராம் கல்லூரியில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெறும் என்றும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லைவ் பர்பாமென்ஸ் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Actor Ravi Mohan: "கெனிஷா என் வாழ்க்கை துணை".. நடிகர் ரவி மோகனின் அறிக்கையால் பரபரப்பு!

மேலும் படிக்க | Karate Kid Legends: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு வெளியானது 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' - ட்ரைலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News