தியேட்டரில் அடிவாங்கிய தக் லைஃப்.. இந்த தேதியில் ஓடிடியில் ரிலீஸ்.. எந்த தளத்தில் பார்க்கலாம்?

Thug Life OTT Release Date: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக் லைஃப் திரைப்படமானது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 3, 2025, 01:38 PM IST
  • 38 ஆண்டுகளுக்கு பிறகு, கமல்-மணிரத்னம் கூட்டணி
  • இந்த படம், கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது.
  • தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்
தியேட்டரில் அடிவாங்கிய தக் லைஃப்.. இந்த தேதியில் ஓடிடியில் ரிலீஸ்.. எந்த தளத்தில் பார்க்கலாம்?

Thug Life OTT Release Date: மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான படம், தக் லைஃப். கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியான இந்த படம், ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. இதையடுத்து, இப்படமானது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

Add Zee News as a Preferred Source

தக் லைஃப் படம்:

38 ஆண்டுகளுக்கு பிறகு, கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவான படம் தக் லைஃப். இந்த படம், கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. இசை வெளியீட்டு விழா, ஊர் ஊராக சென்று ப்ரமோஷன் என பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த படம், கடைசியில் மண்ணை கவ்வியது.

படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் என பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்த போதிலும், இதனை தியேட்டருக்கு இன்னொரு முறை சென்று பார்க்க ஏற்கனவே படம் பார்த்த யாரும் விரும்பவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும், ஹிட் ஆன பாடல்களும் படத்தில் கத்தரிக்கப்பட்டு விட்டதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

“தமிழ் கன்னடத்தில் இருந்து பிறந்தது” என்ற கமலின் பேச்சு கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, படத்தை அங்கு வெளியிட முடியாமல் போனது. இப்படி படத்திற்கு அடி மேல் அடி விழுந்த நிலையில், தற்போது இன்னுமொரு அடி விழுந்துள்ளது.

மணிப்பு கேட்டாரா மணிரத்தினம்:
இதனிடையே தக் லைஃப் படம் வசூலிலும் விமர்சனத்திலும் படி அடிவாங்கியதால் படம் ரிலீஸான சில நாட்களில் இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும்; நானும் கமலும் இணைந்து இன்னொரு நாயகனை கொடுக்க திட்டமிடவில்லை; முழுக்க முழுக்க வேறு படம் கொடுக்க நினைத்ததாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் மணிரத்னம் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை என ராஜ்கமல் நிறுவனம் விளக்கியதாகவும் கூறப்படுகிறது.

தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்:
இந்நிலையில் தற்போது தக் லைஃப் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆக ஆரம்பித்திருக்கிறது. தியேட்டரில்தான் படத்துக்கு சுத்தமாக செல்ஃப் எடுக்கவில்லை. என்வே ஓடிடியிலாவது ரசிகர்களை கொஞ்சம் கவருமா என்ற எதிர்பார்ப்பு படக்குழுவிடமும், ரசிகர்களிடமும் பலமாகவே எழுந்திருக்கிறது.

படக்குழுவிற்கு ஏற்பட்ட நஷ்டம்:

தக் லைஃப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம், மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்தன. படம், சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.

வெளியான நாளில் சுமார் ரூ.15 கோடி வரை கலெக்ட் செய்தது. அடுத்தடுத்த நாட்களில் இந்த வசூல் அப்படியே குறைந்தது. கர்நாடகாவில் வெளியாகாததால், ரூ.30 கோடி படத்திற்கு நஷ்டம் என்று கூறப்படுகிறது. இப்படி படத்தில் பணம் போட்ட கமல்ஹாசன், மணிரத்னம் மற்றும் பிற தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருக்கும் நிலையில், இதன் மூலம் ஒருவருக்கு மட்டும் லாபம் கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க | விஜய் சேதுபதி நடிக்கும் தெலுங்கு படம்! வெளியான முக்கிய அப்டேட்!

மேலும் படிக்க | 120 கிலோ உடல் எடையுடன் இருந்த விஜய் சேதுபதி மகன்... இப்ப எப்படி ஆயிட்டார் பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News