மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தக் லைஃப். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். முன்னதாக ரவி மோகன் (ஜெயம் ரவி), துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அவர்கள் இப்படத்தில் இருந்து விலகி விட்டனர்.
இயக்குநர் மணிரத்தினம் நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் உடன் மீண்டும் கைகோர்த்துள்ளார். கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதனால் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. கமல்ஹாசனுக்கு கடையாக இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது. ஆனால் அப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. மக்கள் மத்தியில் மோசமான விமர்சனமே பெற்றது.
மேலும் படிங்க: என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் - சீயான் விக்ரம்
இதனால் இந்தியன் 3 படம் வருமா? என்ற சந்தேகம் உள்ளது. கமல்ஹாசனுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இறங்கிய திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியு அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது வசூலிலும் அள்ளியது. அதனைத் தொடர்ந்து கல்கி 2898 AD, இந்தியன் 2 ஆகிய படங்கள் வெளியானது.
இச்சூழலில் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி தக் லைப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், அப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது படத்தில் கமல்ஹாசன் பாடும் பாடல் குறித்து வீடியோ வெளியாகி உள்ளது. பந்தலுக்கு ஈசான மூலை என்கிற பாடல் வரிகளை கமல்ஹாசன் பாடும் பாடல் உருவாகி வருகின்றது. விரைவில் அப்பாடல் வெளியாகும் என்ற அறிவிப்புடன் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனை தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரித்த நிலையில், தற்போது, பந்தலுக்கு ஈசான மூலை பாடல் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.
இந்த ஆண்டு பிரபல நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்கலை குஷிப்படுத்த உள்ளது. அடுத்த மாதம் 10ஆம் தேதி அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி, மே 1ஆம் தேதி அன்று சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம். ஜூன் 5ஆம் தேதி கமல்ஹாசனின் தக் லைப், அகஸ்ட் மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி என இந்த ஆண்டு முழுக்க பெரிய படங்கள் வெளியாக இருக்கின்றன.
மேலும் படிங்க: டிராகன் படம் இன்று ஓடிடியில் ரிலீஸ்! 'இந்த' தளத்தில் பார்க்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ