சூர்யாவின் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான படம் கங்குவா. பல ரிலீஸ் தேதிகள் தள்ளி தள்ளி ஒருவழியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்கில் வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான இந்த படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. கங்குவா வெளியான முதல் நாளில் இருந்தே, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானது. இந்நிலையில் கங்குவா படத்தின் தோல்வியால், அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீனிற்கு மற்ற படங்களை வெளியிட முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்பட்டுள்ளது.
மேலும் படிங்க: குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல்! தீயாய் இருக்கும் OG Sambavam ப்ரமோ வீடியோ..
கங்குவா படத்தால் ஏற்பட்ட பிரச்சனை
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அடுத்ததாக வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் வா வாத்தியாரே. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தீ ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பே முடிந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி சிக்கல் காரணமாக இந்த படத்தை தற்போது வெளியிட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை புரிந்து கொண்ட நடிகர் சூர்யா ஞானவேல் ராஜாவிற்கு மீண்டும் படம் பண்ணி தருவதாக தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோலிவுட் வட்டாரங்களில் வெளியான தகவலின் படி, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு நடிகர் சூர்யா இரண்டு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவை சேர்ந்த இயக்குனர்களிடம் தற்போது சூர்யா கதை கேட்டு வருவதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சூர்யாவின் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான எந்த ஒரு படமும் வணிக வெற்றி பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்களும் அதிக வருத்தத்தில் உள்ளனர்.
கங்குவா படம் வெளியாவதற்கு முன்பு அந்த படத்திற்கு ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்டது. படம் 1000 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்றும், பாகுபலியை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்களே இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் படம் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய தவறியது. முதல் காட்சி முடிந்ததிலிருந்து படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் ஏற்பட்டது. இதுவும் கங்குவா படத்தின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படும் கங்குவா படம் 150 கோடி கூட வசூல் செய்யவில்லை. இது சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி படமாக கருதப்படுகிறது. அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ படம் மே 1ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். சூர்யாவிற்கு இந்த படமாவது வெற்றி படமாக அமையுமா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மேலும் படிங்க: Jailer 2 Update: 'ஜெயிலர் 2' படத்தில் இணைந்த பிரபலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









