அரசியலை இப்படித்தான் கையாள வேண்டும்! விஜய்க்கு பிரபல நடிகர் அட்வைஸ்

Shiva Rajkumar Advice To Vijay In Politics : ரஜினி வேறு மாதிரியான ஒரு நடிகர் : கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு பேட்டி. விஜய் குறித்தும் பேசியிருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Oct 8, 2025, 07:03 PM IST
  • விஜய்க்கு பிரபல நடிகர் அட்வைஸ்
  • கரூர் சம்பவம் குறித்து பேச்சு
  • என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க..
அரசியலை இப்படித்தான் கையாள வேண்டும்! விஜய்க்கு பிரபல நடிகர் அட்வைஸ்

Shiva Rajkumar Advice To Vijay In Politics : திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். கோவிலுக்குள் சென்ற அவர் கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை தட்சிணாமூர்த்தி, சத்ரு சம்கார மூர்த்தி மற்றும் பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். கோவிலிலிருந்து வெளியே வந்த அவருக்கு பக்தர்கள் வாழ்த்துகள் தெரிவித்தும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

Add Zee News as a Preferred Source

தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிவராஜ்குமார் பேசுகையில், டிசம்பர் மாதம் அனைத்து மொழிகளிலும் 45 என்ற படம் வெளியாக உள்ளது. 
பெயில் என்ற திரைப்படம் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. ஜெயிலர் 2 ம் பாகத்திலும் நடித்து வருகிறேன். சர்ப்ரைஸ் கொடுப்பதற்கான இன்று திருச்செந்தூர் வந்தேன். 

ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளது குறித்து கேட்டதற்கு எங்கு நிம்மதி கிடைக்கிறதோ அங்கு செல்வது வழக்கம். அவர் எப்போதும் செல்வது வழக்கமான ஒன்று தான். ரஜினி வேறமாதிரியான ஒரு மனிதர். விஜய் அரசியலுக்கு வந்தபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழக அரசியல் குறித்து எனக்கு பெரிய அளவில் தெரியாது. தமிழகத்தில் ஸ்டாலின் அவரது மகன் ஆகியோரை நன்றாக தெரியும். அதுமட்டுமல்லாமல் அனைத்து கட்சியும் தெரியும். 

விஜய்க்கு அட்வைஸ்!

விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கதக்கது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வந்துள்ளஅவருக்கு ஆல் த பெஸ்ட். கரூர் சம்பவம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று எனக்கு தெரியாது. விஜய் என்ன ஸ்டெப் எடுத்து வைத்தாலும் யோசித்து நிதானமாக எடுத்து வைக்க வேண்டும் என்று ஒரு சகோதரராக கூறுகிறேன் என்றார்.

மேலும் படிக்க | “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” ஐசரி கணேஷ் ஆரம்பித்த புது நிறுவனம்!

மேலும் படிக்க | கவின் - நயன்தாரா வயது வித்தியாசம் என்ன? Hi படத்தில் ஜோடி செட் ஆகுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News