)
Kantara Actrees Rukmini Vasanth Salary: சப்தசாகர் தாதி என்கிற படம் மூலமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர், ருக்மிணி. இவரது நடிப்பை முதல் படத்திலேயே பார்த்து, ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். ருக்மிணி, கன்னட படங்களில் மட்டுமல்ல, தமிழிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பல கன்னடத் திரைப்படங்களில் நடித்து பிலிம்பேர் விருதுகள் வாங்கியுள்ளார்.
இவர் தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஏஸ் என்கிற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த படம் சுமாராக ஓடிய நிலையில் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மதராஸி படத்தில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் ஆன இவரது ஜோடி, பலரை ஈர்த்தது. சமீபத்தில், ரிஷப் ஷெட்டியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான படம், காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தின் முன் கதை தற்போது ‘காந்தாரா சாப்டர் 1’ என்கிற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திலும் ரிஷப் ஷெட்டியே ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் இந்த படம் வெளியானது. அனிருத் மகேஷ், ஷானில் கவுதம் இணைந்து இப்படத்திற்கு கதை எழுதியுள்ளனர். அரவிந்த் S காஷ்யப், ISC ஒளிப்பதிவு செய்ய, இசை & பின்னணி இசை B. அஜனீஷ் லோக்நாத் அமைக்க மற்றும் சுரேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு உள்ளார். மிகப்பெரிய பொருள் செலவல் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் சர்ச்சைகளும் எழுந்த வந்த நிலையில் தற்போது இந்த படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மிணி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 1 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தற்போது வரை இந்த படம், ஐந்து நாட்களில் உலகளவில் ரூ. 380 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. கூடிய விரைவில் ரூ. 500 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்திற்கு முன்பு நடப்பது போல் காந்தாரா சாப்ட்டர் 1 கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் ஏற்கனவே வெளியான படத்தை பார்க்கவில்லை என்றாலும் இந்த படத்தை பார்க்கலாம். ஒரு கொடூர அரசன் தன்னுடைய நிலப்பரப்பில் இருந்து தூரத்தில் இருக்கும் ஈஸ்வர தோட்டத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார். காரணம் அந்த இடத்தில் பலவித அமானுஷ்யங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குலிங்கா எனப்படும் கடவுள் அந்த காட்டை பாதுகாப்பதாக கூறப்படுகிறது. அந்த பகுதிக்கு வரும் கொடூர எண்ணம் கொண்ட ராஜாவை கொலை செய்து விடுகிறது குலிங்கா. அவரது மகன் ஜெயராம் அங்கிருந்து தப்பித்து மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புகிறார். ஜெயராமிற்கும் அந்த இடத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜெயராம் மகன் குல்ஷன் தேவய்யா (குலசேகரா) அந்த இடத்திற்கு செல்ல முயற்சிக்கிறார். அங்கு பழங்குடியின மக்களின் தலைவனாக இருக்கும் ரிஷப் ஷெட்டி (பெர்மே) மீண்டும் அவரை விரட்டி அடிக்கிறார். அதன் பின்பு என்ன நடந்தது என்பதே காந்தரா சாப்ட்டர் 1 படத்தின் கதை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ