தக் லைஃப் பட ரிலீஸின் போது பாதுகாப்பு வழங்கப்படும்-கர்நாடக அரசு அறிவிப்பு!

Karnataka Government Security For Thug Life Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைஃப் படம் வெளியானால் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2025, 11:48 AM IST
  • மொழி சர்ச்சைக்கு பின் முக்கிய முடிவு
  • தக் லைஃப் கர்நாடகாவில் ரிலீஸ்
  • பாதுகாப்பு வழங்குவதாக உறுதி
தக் லைஃப் பட ரிலீஸின் போது பாதுகாப்பு வழங்கப்படும்-கர்நாடக அரசு அறிவிப்பு!

Karnataka Government Security For Thug Life Release : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த படம் தக் லைஃப். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.

Add Zee News as a Preferred Source

மொழி சர்ச்சை:

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கூறிவிட்டார். அதற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா முதல், பலர் கண்டனம் தெரிவித்தனர். கமல் மன்னிப்பு கேட்கும் வரை கர்நாடகாவில் படம் வெளியாகாது என்றும் மிரட்டல் விடுத்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 5ஆம் தேதி கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் தக் லைஃப் படம் பல்வேறு மொழிகளில் வெளியானது.

அதிரடி தீர்ப்பு:

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்வது குறித்து வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் இப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும், இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை என கூறிய நீதிபதிகள், அவரது பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது என்று கூறினர். மேலும், மன்னிப்பு கேட்டால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என உயர்நீதிமன்றம் எப்படி கூறலாம் என்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

தக் லைஃப் படம் வெளியாகும் போது, திரையரங்குகளின் பாதுகாப்பை அரசு உதவி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிடும் போது அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும் என்று, கர்நாடக அரசு உச்சநீதிமன்ரத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்து உள்ளது.

படம் தோல்வி:

கமல்ஹாசன், த்ரிஷா, சிலம்பரசன், அபிராமி உள்பட பலர் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாட்டு மக்களே பெரிதாக விரும்பவில்லை. பாடல்கள் கத்தரிக்கப்பட்டதும், திரைக்கதை பிணைப்பில்லாமல் இருந்ததும் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது. இதையடுத்து, இப்போது படம் கர்நாடகாவில் ரிலீஸாவது குறித்து பேசும் கர்நாடக தியேட்டர் ஓனர்கள், இதுக்கு மேல ஒரு லாபமும் இதிலிருந்து தங்களுக்கு கிடைக்கப்போவது இல்லை என்று கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | இந்தியன் 2 பரவாயில்லை போல..தக் லைஃப் கலக்‌ஷன் இவ்வளவுதானா? ரசிகர்கள் ஷாக்!

மேலும் படிக்க | தக் லைஃப் ஓடிடி விலை..தோல்வி படத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா? எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News