ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும் “காட்டாளன்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகி வரும் 'காட்டாளன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 12, 2025, 04:57 PM IST
  • எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார்
  • ஆண்டனியின் அதிரடி லுக்
ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும் “காட்டாளன்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்‌ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார் — இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது. ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்‌ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது.

Add Zee News as a Preferred Source

பான்-இந்தியா ஹிட் ஆக்‌ஷன் திரில்லர் *“மார்கோ”*விற்கு பின், “காட்டாளன்” படம் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மற்றொரு மிகப்பெரும் முயற்சியாக அமைந்துள்ளது.

புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் “காட்டாளன்”, மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது. பான்-இந்தியா பிரம்மாண்டம் என்ற கான்செப்டில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாராகிறது. தாய்லாந்தில் நடந்த அதிரடி காட்சிகள் படப்பிடிப்பின் போது, யானை சம்பந்தமான காட்சியில் ஆண்டனி காயம் அடைந்தார். உலகப் புகழ் பெற்ற “Ong-Bak” படத்தொடரின் ஆக்‌ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவரது நிபுணர் குழுவே இந்த ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், “Ong-Bak” படத்தில் புகழ்பெற்ற யானை பொங் இதிலும் நடித்துள்ளது.

படத்திற்கான இசையை “காந்தாரா”, “மகாராஜா” போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சுனில் (Pushpa, Jailer 2), கபீர் துகான் சிங் (Marco), ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு (Pushpa), பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி (Kill movie fame) ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத் திரையுலகிலிருந்து ஜகதீஷ், சித்திக், மற்றும் VLogger-பாடகி ஹனான் ஷா இணைந்துள்ளனர்.

திரைக்கதை ஜோபி வர்கீஸ், பால் ஜார்ஜ், மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்; உரையாடலை உன்னி ஆர் எழுதியுள்ளார். படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

தொழில்நுட்பக் குழு:

நிர்வாக தயாரிப்பாளர் – ஜுமான்ஷெரீஃப்
ஒளிப்பதிவு – ரெனாடிவ்
இசை – B. அஜனீஷ் லோக்நாத்
எடிட்டிங் – ஷமீர் முஹம்மது
ஸ்டண்ட் – கேச்சா காம்பக்டீ, ஆக்‌ஷன் சந்தோஷ்
புரடக்‌ஷன் டிசைன் – சுனில் தாஸ்
கிரியேட்டிவ் புரடியூசர் – தீபில் தேவ்
புரடக்‌ஷன் கண்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்
ஆடியோகிராஃபி – ராஜகிருஷ்ணன் M.R.
சவுண்ட் டிசைன் – கிஷன், சப்தா ரெக்கார்ட்ஸ்
உடை வடிவமைப்பு – தன்யா பாலகிருஷ்ணன்
மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்
பாடல்கள் – சுஹைல் கோயா
ஸ்டில்ஸ் – அமல் C. சுதர்
நடன அமைப்பு – ஷரீஃப்
விஎஃப்எக்ஸ் – 3 டோர்ஸ்
பிஆர் & மார்க்கெட்டிங் – வைசாக் C.வடக்குவீடு, ஜினு அனில் குமார்
பிஆர்ஓ – சதீஷ் குமார் S2 Media, ஸ்ரீ வெங்கடேஷ் P
டிஜிட்டல் மார்க்கெட்டிங் – ஆகாஷ்
டைட்டில் டிசைன் – ஐடென்ட் லாப்ஸ்
பப்ளிசிட்டி டிசைன் – யெல்லோ டூத்

மேலும் படிக்க | பிரியங்கா மோகனின் AI கவர்ச்சி புகைப்படங்கள்! இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு..

மேலும் படிக்க | பிக்பாஸ் 9 : போட்டியில் இருந்து விலகிய நந்தினி! காரணம் என்ன? அவரே சொன்னது-வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News