Youth OTT Reaction : கென் கருணாஸின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம், ‘யூத்’. இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இதையடுத்து, இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனம் குறித்து இங்கு பார்ப்போம்.

Youth OTT Reaction : கடந்த சில வருடங்களாகவே, தமிழ் சினிமாவில் பல இளம் இயக்குநர்கள் தடம் பதித்து வருகின்றனர். சங்கர், மணிரத்னம், கே.எஸ்.ரவிகுமாரின் படங்களை விட அஸ்வத் மாரிமுத்து, லோகேஷ் கனகராஜ், அபிஷன் ஜீவிந்த் உள்ளிட்டோரின் படங்கள்தான் GenZ தலைமுறைக்கு பிடித்ததாக இருக்கிறது. புதுமுக இயக்குநர்களான இவர்கள் இயக்கும் படங்கள்தான் ரூ.100 கோடி ஹிட்டும் அடிக்கின்றன. இந்த லிஸ்டில், புதிதாக இணைந்திருப்பவர்தான் கென் கருணாஸ். இவர் சமீபத்தில் இயக்கி நடித்திருந்த படம்தான், யூத்.
யூத் திரைப்படம்:
கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி வெளியாகி இருந்த படம் யூத். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்திருந்தார் கென் கருணாஸ். நகைச்சுவை நடிகர் கருணாஸின் மகனான இவர், ஹீரோவாக நடிக்கும் முதல் தமிழ் படம் இதுதான். இதற்கு முன்பாக தனது தந்தையின் படங்களிலும், தனுஷின் வாத்தி மற்றும் அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
கதை என்ன?
யூத் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த பெரும்பாலானோர் புது முகங்கள்தான். இதில் மூன்று நாயகிகளுக்கு கென் கருணாஸ்தான் ஒரே ஒரு ஹீரோ. 15 வயதான ஒரு சிறுவன், வாழ்க்கையில் பெற்றோரின் ஏமாற்றம், காதல் தோல்வி, இளம் வயதில் வரும் பிரச்சனைகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை கடந்து வருவதை வைத்துதான் யூத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியான போது, நல்ல வரவேற்பை பெற்றது.
ஓடிடியில் கிடைத்துள்ள விமர்சனம்!
வழக்கமாக, தியேட்டரில் வெளியாகும் போதும் ஓடிடியில் வெளியாகும் போதும் படங்களுக்கு இருவேறு விமர்சனங்கள் வரலாம். குறிப்பாக சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தியேட்டரில் வெளியாகி அதனை பார்க்க மிஸ் செய்த மக்கள், ஓடிடியில் அப்படத்தை பார்ப்பார்கள். அப்போது வரும் விமர்சனங்கள் வேறாக இருக்கலாம். சமீபத்தில் யூத் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதை பார்த்த பலர், தங்கள் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இது இன்னொரு ‘டான்’ திரைப்படம்!
யூத் படத்தை பார்த்த ஒரு ரசிகர், இந்த படத்தை இன்னொரு டான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். தான் சிவகார்த்திகேயனின் டான் படத்தை தமிழ் சினிமாவிற்கு பெஞ்ச் மார்க் ஆக வைப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கூறியிருந்த அவர், அதே படத்தின் டெம்ப்ளேட்டைத்தான் இந்த படமும் ஃபாலோ செய்வதாக கூறியிருக்கிறார்.
I would have never thought I would call #SK's #Don to be a benchmark for coming-of-age stories in Tamil Cinema.#Youth follows the same tropes, even got a wannabe touch with the majority of sequences, but I would say Suraj and the third act carried it from not being bad. pic.twitter.com/UYCR0k4TlF
— Aditya (@AdityaAijt) April 17, 2026
க்ரிஞ்ச்:
படத்தில் சுராஜ் நன்றாக நடித்திருப்பதாகவும், சில காட்சிகள் எமோஷனலாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் க்ரிஞ்ச் ஆக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
#Youth
— Levi Ackerman (@me_njl_) April 17, 2026
Surajettan sequences worked for me both comedy and emotional, but the rest mostly felt cringe. Ken still has solid potential pic.twitter.com/qtXGI157Bz
எல்லா சீன்லையும் பாடல்..
யூத் படத்தை ஒரு ரசிகர், ரொம்பவும் கொடூரமாக விமர்சித்திருக்கிறார். அதில், படத்தில் அவருக்கு பிடித்திருந்த ஒரே விஷயமாக ஹீரோவின் தந்தை பேசும் மலையாளம் கலந்த தமிழ்தான் என்று கூறியிருக்கிறார். மேலும், ஜிவி பிரகாஷின் இசை நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் சமயத்தில் சீனுக்கு சீன் பாட்டு வருவதாக கூறியிருக்கிறார். மேலும், இதில் வரும் ஒரு கேரக்டர் கூட, பொருந்துவதாக இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
Mairu mari Irunchi #Youth 2/5
(@SixEyedTyrant) April 17, 2026
Enaku pudichi iruntha orey vishyam
Hero oda appa pesura malayalam mixed Tamil thaan antha tone eh funny ah Irunchi..
Enna da GVP Music nala potu irukaan pola romba Nal kalichu nu think pandra apo watha ella scene layum paatu varuthu
Technically…
இன்னோரு ரசிகரும் டான் படத்தை பார்த்தது போலவே இருப்பதாக யூத் படம் குறித்து விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார். படம் முழுவதும் க்ரிஞ்ச் ஆக இருந்ததாகவும், கடைசியில் முட்டாள்தனமாக ஒரு மெசேஜை இந்த படம் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.
Just completed watching #Youth movie on @netflix. Felt like watching @Siva_Kartikeyan’s Don school version. Cringe throughout the movie just to give a stupid ass emotional message in the end
— Mahatma Ganja (@1G4V3) April 16, 2026
Gen-Zயின் ரசனை இதுதானா?
இன்னொரு ரசிகர், Gen-Zயின் ரசனையை கேள்வி கேட்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். சினிமாவை இன்னும் முன்னேற்றி செல்வார்கள் என்று பார்த்தால், இப்படி இன்னும் பின்னோக்கி இழுக்கிறார்களே என்று கூறியிருக்கிறார். மேலும் இதை பார்த்து யாரும் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றும் கூறியிருக்கிறார்.
#Youth is such a crap movie. I thought Gen-Z would have become smart and grown up from early simbu, SK cringe incel films. Turns out they have only devolved.
— Lone Wolf (@iamVetrii) April 16, 2026
Don't waste your time watching this shit!
இதுதான் ட்ரூ லவ்:
எதிர்பார்ப்புகள் இல்லாமல் வரும் காதலே உண்மையான காதல் என்கிற கருத்தை படம் நிலைநாட்டுவதாக அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
“இளமைப் பருவம், காதல் மற்றும் சுய கண்டுபிடிப்பு பற்றிய ஒரு எளிய, அதே சமயம் ஈர்க்கும் கதை, நேர்மையான நடிப்பால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, கண்டு மகிழத்தக்க ஒரு படம்” என்பதை அந்த ரசிகர் கூறியிருக்கிறார்.
5 minutes into #Youth pic.twitter.com/H1lID2H6RE
— Freudenfreude Mazhai Kuruvi (@AthamleVargeesu) April 17, 2026
இவையெல்லாம் இருந்தாலும் ஒரு சிலர், தங்களுக்கு உண்மையாகவே படம் பிடித்திருப்பதாக கூறி இருக்கின்றனர். மேலும், படத்தில் ஹீரோவாக ஜிவி பிரகாஷின் மியூசிக்தான் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறனர். இன்னும் சிலர் அதனை கலாய்த்து மீமும் போட்டு வருகின்றனர். மொத்தத்தில் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!