Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம்.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அஞ்சலி அம்மா வீட்டுக்கு செல்வதாக சொன்னதும் மகேஷ் டென்ஷனான இலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அதாவது, மகேஷ் கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்க அஞ்சலி அங்கு வந்து நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா என்று கேட்க மகேஷ் வேண்டாம் என்று சொல்கிறான். இருவருக்கும் இடையே ரொமான்ஸ் அதிகரிக்கிறது.
அடுத்ததாக கவின் வீட்டில் எந்நேரமும் குடித்துக் கொண்டே இருக்க அவனது அம்மா பாலில் மருந்தை கலந்து கொடுக்க அவன் சுயநினைவின்றி மயங்கி விழுந்து கிடக்க ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். டாக்டர் உங்க பையனுக்கு குடிக்கிற பழக்கம் இருக்கா என்று கேட்க கவினின் அப்பா என் பையனுக்கு அந்த மாதிரி பழக்கம் எல்லாம் இல்லை என அடித்து சொல்ல டாக்டர் இல்லை அவர் அளவுக்கு அதிகமா குடிச்சு இருக்காரு டெஸ்ட் எடுத்து உறுதியாக சொல்கிறோம் என்று சொல்கிறார்.
அடுத்து இங்கே அஞ்சலி அம்மா வீட்டுக்கு கிளம்ப பேக் செய்து கொண்டு இருக்க இதைப் பார்த்த மகேஷ் டென்ஷன் ஆகிறான். ஆபீஸிற்கு கிளம்பி வருகிறான். ஆபீஸுக்கு கிளம்பி வந்ததும் அவன் கண் முன் தோன்றும் மனசாட்சி அஞ்சலிக்கு உன் மேல லவ்வே கிடையாது.. அவ அவளோட குடும்பத்தை தான் காதலிக்கிறா என்று சொல்ல மகேஷ் டென்ஷன் ஆகிறான்.

இதைத்தொடர்ந்து மகேஷ் அஞ்சலிக்கு போன் போட்டு உனக்கு என் மேல லவ் இருக்கா இல்லையா என்று கேட்கிறான். அஞ்சலி என் வீட்ல இருக்க எல்லாரும் எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு அதே அளவுக்கு உங்களையும் லவ் பண்றேன் என்று சொல்ல நானும் அவங்களும் ஒன்னு தான் என்று கேட்க அஞ்சலி இல்லை அவங்கள விட நீங்க ஒரு படி மேல என்று சொல்ல மகேஷ் சந்தோஷப்படுகிறான்.
பிறகு ஹாஸ்பிடல் கவின் நிறைய குடித்திருப்பதாக ரிப்போர்ட் வர இந்த விஷயம் வருகிறது அவனது அப்பா அதிர்ச்சி அடைகிறார்.
இதையடுத்து சிவராமன் டல்லாக இருக்க லட்சுமி என்ன ஆச்சு வீட்டு செலவுகள் அடுத்தடுத்து வந்துகிட்டே இருக்கும் உங்களுக்கு கஷ்டம் கொடுத்துக்கிட்டே இருக்கோமா.. நானும் ஒரு வேலைக்கு போகவா என்று கேட்க சிவராமன் இதைவிட நாம எவ்வளவோ கஷ்டத்தை பார்த்திருக்கோம். அப்பவே நான் உன்னை வேலைக்கு அனுப்புனதில்ல, நீ என்கூட இருந்தாலே போதும் எல்லாத்தையும் நான் சமாளிப்பேன் என்று சொல்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
மேலும் படிக்க| பஹத் பாசில் - வடிவேலு இணைந்து மிரட்டும் 'மாரீசன்'! ரிலீஸ் தேதி இதுதான்!
மேலும் படிக்க| ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படம் எப்படி இருக்கு? வெற்றிமாறன் என்ன சொல்கிறார்?









