)
Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம்.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: வெற்றி தியாவை மீட்டுக் கொடுக்க துளசி அவளுக்கு நன்றி சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்றது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றி தியாவை மீட்டுக் கொடுக்க துளசி அவளுக்கு நன்றி சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்றது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, துளசி வெற்றிக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்கிறாள். அந்த எம்.எல்.ஏ ஈஸ்வரமூர்த்தியோட பையன் தான் தியாவை காப்பாத்தினார். இதுவரைக்கும் நான் அவர தப்பா நினைச்சுட்டு இருந்திருப்பேன் அது ரொம்ப நல்லவரா இருக்காரு என்று சொல்ல வெற்றி சந்தோஷப்படுகிறாள்.
அடுத்ததாக வெற்றியின் அம்மாவிற்கு முனுசாமியின் மகளை மிகவும் பிடித்து போகிறது. அந்த பெண்ணை வெற்றியுடன் ஜோடியாக நிற்க வைத்து பார்க்க ஆசைப்படுகிறாள். உடனே வெற்றிக்கு போன் செய்ய அவன் துளசியுடன் பேசிக் கொண்டிருந்ததால் போனை எடுக்காமல் இருக்கிறான்.
அதன் பிறகு கோவிலுக்கு வரும் வெற்றி அந்த பெண் பக்கத்தில் நின்று சாமி கும்பிடுகிறான். பூசாரி இரண்டு பேர் கையில் சாமி கழுத்தில் இருந்த மாலையை கொடுத்து தங்களது கழுத்தில் போட்டுக்கொள்ள சொல்கின்றனர். இதை வெற்றியின் அம்மா பார்த்து இருவரும் மண கோலத்தில் இருப்பது போலவே கனவு காண்கிறாள்.
அடுத்ததாக வெற்றியின் குடும்பத்தார் ஜாதகம் பார்த்து வந்திருக்கும் வரை உனக்கு சரியாக இருக்கும் என்று துளசியிடம் பேச முதலில் நோ சொல்லும் அவள் ஒரு கட்டத்தில் தியாவையும் சேர்த்து ஏற்றுக் கொள்பவராக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம் என சொல்கிறாள்.
அதன் பிறகு கவினின் நண்பனுக்கு அடிபட்டு விட்டதாக கவினுக்கு போன் வருகிறது. அதேபோல் அஞ்சலிக்கும் போன் கால் வர அஞ்சலி மகேஷிடம் நாம போய் அவன் வீட்ல பாத்துட்டு வந்து விடலாம் என்று சொல்கிறாள்.
அதன் பிறகு ஈஸ்வரமூர்த்தி குடும்பத்தார் வெற்றிக்கு முனுசாமி மகளை பேசி முடித்து விடலாம் என முடிவெடுக்கின்றனர். இந்த சமயத்தில் முனுசாமி தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் வெற்றி வீட்டிற்கு வருகிறார். ஈஸ்வரமூர்த்தி அந்த பொண்ண கூட்டிட்டு போய் வீட்டை சுத்தி காட்டு என வெற்றியை அனுப்பிவிட்டு கல்யாணம் பற்றி பேசுகிறார்.

இந்தப் பக்கம் துளசியை பார்க்க வந்த மாப்பிள்ளை எனக்கு எல்லா விஷயமும் தெரியும். உங்களுடைய கண்டிஷன்களுக்கு சம்மதம் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ