Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம்.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் வெற்றி துளசியுடன் தப்பாக நடந்து கொண்ட பாஸை போட்டு அடி வெளுத்தெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அதாவது, துளசி ஆபிசுக்கு வர அவளது பாஸ் நடந்த விஷயத்திற்காக மன்னிப்பு கேட்கிறான். நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டதா உங்க பிரண்டு கிட்ட சொல்லிடுங்க எனக்கு சொல்ல துளசி யாரு என்று தெரியாமல் குழப்பம் அடைகிறாள்.

அடுத்ததாக வெளியே வந்த அவள் வெற்றிக்கு போன் போட்டு நான் உங்ககிட்ட எனக்கு இருக்க பிரச்சனையை சொல்லாமலேயே நீங்க அதை புரிஞ்சுகிட்டு எனக்காக இவ்வளவு பெரிய உதவி பண்ணிருக்கீங்க ரொம்ப நன்றி என்று சொல்ல வெற்றி நம்ம மனசுக்கு பிடிச்சவங்க ஏதாவது ஒரு கஷ்டத்தில் இருந்தா அது நமக்கு தெரியும் என சொல்கிறான். துளசிக்கும் வெற்றிக்கும் இடையே ஒரு நல்ல பாண்டிங் உருவாகத் தொடங்குகிறது.
அடுத்ததாக முருகனை ஒருவன் அடுத்த விஷயம் ரேவதிக்கு தெரிய வர அவன் முருகனை அழைத்துச் சென்று அவனுக்கு யாருமில்லை என்று நினைத்தாயா நான் இருக்கேன் முருகா நீ அவன் அடிடா என்று சொல்ல ரவுடி ரேவதி அடிக்க வர முருகன் அவனை போட்டு அடிக்கிறான். அதன் பிறகு இது முருகனின் கனவு என்ன தெரிய வருகிறது.
அடுத்ததாக அஞ்சலி அடைத்து நான் எக்ஸாம் முடித்துவிட்டு கிளம்பும்போது அவளது பிரண்ட்ஸ் எதாவது எழுதி கொடுத்துட்டு போ என்று சொல்ல மை ஃப்ரண்ட்ஸ் மை லைஃப் என எழுதி வாத்து எனவும் குறிப்பிடுகிறாள்.

அஞ்சலி அப்படி என்ன தான் எழுதி கொடுத்தா என மகேஷ் அஞ்சலியின் தோழிகளிடம் நோட்டை வாங்கி பார்த்து அந்த வாத்து யாரு என தெரியாமல் டென்ஷன் ஆகிறான். பிறகு பாலமுருகன் லட்சுமி செய்து கொடுத்ததாக சொல்லி எதையோ கொண்டு வந்து கொடுக்கிறான்.

பாலமுருகனை பார்த்ததும் மகேஷ் டென்ஷன் ஆகிறான். பிறகு அஞ்சலி மூன்று பேரும் சேர்ந்து போட்டோ எடுக்கலாம் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
மேலும் படிக்க| 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரஷாந்த் - இயக்குனர் ஹரி!









