அப்பா, அம்மாவை மறந்த கேசவன்.. கடைதிறப்பு விழாவில் காத்திருந்த அதிர்ச்சி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today's Episode Update: துளசி வெற்றியிடம் நன்றி சொல்லி போனில் பேசிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Keerthana Devi | Last Updated : Apr 8, 2025, 12:54 PM IST
    • ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் சீரியல்..
    • 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது..
    • இன்றைய எபிசோட் அப்டேட்..
அப்பா, அம்மாவை மறந்த கேசவன்.. கடைதிறப்பு விழாவில் காத்திருந்த அதிர்ச்சி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம். 

Add Zee News as a Preferred Source

கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி வெற்றியிடம் நன்றி சொல்லி போனில் பேசிய நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கெட்டி மேளம் இன்றைய எபிசோட்:  அதாவது, கேசவனுக்கு லோன் கிடைக்க அவன் ஒரு ஹோம் அப்பிளையன்ஸ் கடையை திறக்க முடிவு செய்கிறான். இந்த விஷயம் அறிந்த லட்சுமி மிகுந்த சந்தோசப்படுகிறாள். அடுத்து வெற்றியின் வீட்டிற்கு சென்று எல்லாரையும் வரவேற்கிறான்.

அடுத்து இரவு எல்லாரும் ஒன்று கூட கேசவன் கடை திறக்கும் விஷயத்தை பற்றி சொல்கின்றனர். எல்லாரும் கேசவனுக்கு வாழ்த்து சொல்ல துளசி வேறு வேலை காரணமாக வெளியே செல்வதால் கடை திறப்பு விழாவிற்கு வர முடியாது என்று மன்னிப்பு கேட்கிறாள்.

kettimelam

மறுபக்கம் அஞ்சலி வீட்டில் இருக்க மகேஷ் ஆபிசில் இருந்து ஒரு ஐந்து பேர் வீட்டிற்கு வந்து பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லி அழைக்கின்றனர், அஞ்சலி அவர்கள் உபசரித்து பேசி கொண்டே இருக்க மகேஷ் டென்ஷன் ஆகிறான். 

அடுத்த நாள் கடை திறப்பு விழா ஏற்பாடுகள் நடக்க வெற்றியின் குடும்பத்தினர் வந்து இறங்குகின்றனர். கேசவன் ரிப்பன் கட் செய்ய கத்திரிக்கோலை எடுத்து வந்து லட்சுமி சிவராமனை தாண்டி சென்று வெற்றியின் அப்பாவிடம் கொடுக்க லட்சுமி வருத்தமடைகிறாள். 

அடுத்து குத்துவிளக்கு ஏறிவதிலும் தனது மாமனாருக்கு முதல் உரிமை கொடுக்க லக்ஷ்மியின் வருத்தமும் கோபமும் மேலும் அதிகமாகிறது. லட்சுமி வருத்தமாக இருப்பதை பார்த்த சிவராமன் என்னாச்சு என்று கேட்க லட்சுமி தனது வருத்தத்தை சொல்ல சிவராமன் இதுல என்ன இருக்கு லட்சுமி? நம்ம பையன் நல்லபடியா வரணும்னு ஆசைப்பட்டோம். இது அது நடந்திருக்கு அது போதும் என சொல்கிறார். 

kettimelam

மேலும் எனக்கு நீ இருக்க உனக்கு நான் இருக்க இதை தவிர நமக்கு என்ன வேணும் என ஆறுதல் சொல்கிறார். அதனை தொடர்ந்து வெற்றி கேசவனை தனியாக அழைத்து சென்று வாழ்த்து சொல்கிறான். உங்களை நான் எவ்வளவோ அவமானப்படுத்தி பேசி இருக்கேன். ஆனால் இப்போ என் அக்கா உங்க வீட்டில் வாழுறதை நினைத்து பெருமைப்படுறேன் என்று சொல்கிறான். 

kettimelam

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

மேலும் படிக்க| வடிவேலு ரிஜெக்ட் செய்த படம்! விஜய் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் ஆனது..எது தெரியுமா?

மேலும் படிக்க| இந்த வார ஓடிடி ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

About the Author

Trending News