Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம்.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கேசவன் கடை திறப்பு விழாவில் வெற்றியின் பெற்றோருக்கு முன்னுரிமை கொடுக்க லட்சுமி வருத்தம் அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அதாவது துளசி மற்றும் தியாக என இருவரும் ரோட்டில் நடந்து செல்ல அந்த வழியாக வந்து வெற்றி வாங்க நான் உங்களை வீட்டில் டிராப் பண்றேன் என்று கூப்பிட துளசி உங்க உதவி தேவையில்லை என்று உதாசீனம் செய்கிறாள்.

அதைத்தொடர்ந்து வெற்றி லட்சுமிக்கு போன் போட்டு அக்கா வர வழியில துளசியையும் தியாவையும் பார்த்தேன். வாங்க வீட்ல நானே விட்டுறேன்னு கூப்பிட்டா வர மாட்றாங்க நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க என்று சொல்லி போனை கொடுக்க லட்சுமி வெற்றியுடன் வர சொல்ல இருவரும் அவனுடன் கிளம்பி வருகின்றனர்.
வெற்றி நேராக ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்று தியாவிற்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கிறான். துளசிக்கும் வாங்கிக் கொடுக்க அவள் வேண்டாம் என்று மறுக்க இது நான் செஞ்சது கிடையாது கடைக்காரர் செய்தது என சொல்லி சாப்பிட வைக்கிறான்.

அடுத்ததாக லட்சுமி கடை திறப்பு விழாவில் நடந்ததையே நினைத்து வருத்தத்தில் இருக்க சிவராமன் அவன் ஏதோ ஒரு பிசினஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டோம் அது இப்போ நடந்துருச்சு அதுவே போதும் என ஆறுதல் சொல்கிறார்.
அடுத்த நாள் காலையில் பாலமுருகன் டிப் டாப்பாக ரெடியாகி இன்னொரு டப்பா எக்ஸ்ட்ராக சாப்பாடு கட்ட சொல்லி வேலைக்கு கிளம்ப லட்சுமி இவன் யாருக்கு சாப்பாடு கொண்டு போறான் என பாலோ செய்கிறாள். பாலமுருகன் துர்காவுக்கு லட்சுமி அதை பார்த்து அவனுக்கும் ஒரு வாழ்க்கை அமைந்த சந்தோஷம் தான் என நினைக்கிறாள்.
அடுத்ததாக வெற்றி லட்சுமியை பார்க்க வீட்டுக்கு வர துளசி எதுக்கு வந்தீங்க என்று கோபப்படுகிறாள். வெற்றி தியாவுக்காக வாங்கி வந்த மருந்தை எடுத்துக் கொடுக்க துளசி வேண்டாம் என மறுக்கிறாள்.
அடுத்ததாக வெற்றி கோவிலுக்கு வந்து லட்சுமி பார்த்துவிட்டு நீங்க இங்கேயே இருங்க.. நான் சாமி கும்பிட்டு விட்டு வந்து விடுகிறேன் என்று உள்ளே செல்ல சாமியார் ஒருவர் துளசிக்கு ஒரு வரன் வந்திருப்பதாக சொல்கிறார்.
பிறகு வீட்டுக்கு வந்த லட்சுமி சாமியார் சொன்ன விஷயத்தை சொல்ல சிவராமன் மாப்பிள்ளை ஆக வருபவர் தியாவையும் சேர்த்து ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும் என சொல்கிறார்.

அடுத்து மகேஷ் அஞ்சலிக்கு போன் செய்து ரெடியா இரு பார்ட்டிக்கு போகலாம் என்று சொல்ல அந்த சந்தோஷமாக ரெடியாக தொடங்குகிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
மேலும் படிக்க| குட் பேட் அக்லி படத்தில் விஜய் டைலாக்கை பேசிய அஜித்! என்ன தெரியுமா?









