வெற்றியை வார்த்தையால் காயப்படுத்தும் துளசி.. மகேஷ் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today's Episode Update: துளசி தியாவுடன் ஹாஸ்பிட்டல் வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Keerthana Devi | Last Updated : Mar 12, 2025, 11:27 AM IST
    • ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் சீரியல்..
    • 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது..
    • இன்றைய எபிசோட் அப்டேட்..
வெற்றியை வார்த்தையால் காயப்படுத்தும் துளசி.. மகேஷ் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம். 

Add Zee News as a Preferred Source

கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: துளசி தியாவுடன் ஹாஸ்பிட்டல் வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

kettimelam

கெட்டி மேளம் இன்றைய எபிசோட்:  அதாவது தியாவை பரிசோதனை செய்த டாக்டர் என்னாச்சு? எப்படி இப்படி ஆனது? என்று விசாரிக்க நடந்த ஆக்சிடென்ட் குறித்து சொல்கிறாள். 

இதையடுத்து சில டெஸ்ட்டுகளை எடுத்த பிறகு டாக்டர் இது எல்லாவற்றையும் கியூர் செய்து விடலாம் என்று சொல்ல எவ்வளவு செலவாகும் என்று கேட்க 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று சொல்கிறார் டாக்டர். 

பணத்திற்காக என்ன செய்வது என்று யோசிக்கும் துளசி அங்கிருந்து கிளம்பி வருகிறாள். மறுபக்கம் மகேஷ் அஞ்சலிக்கு போன் செய்து பேசுகிறான். பிறகு துளசி தியா மற்றும் அம்மா லட்சுமியுடன் கோவிலுக்கு வருகிறாள். 

இதே கோவிலுக்கு வெற்றியும் வர லட்சுமி அவனை அழைத்து பேசுகிறாள். அடுத்து பிரசாதம் வாங்கி வருவதாக சொல்லி கிளம்பி செல்ல துளசி இங்கேயும் பாலோ பண்ணிட்டு வந்துடீங்களா? தயவு செய்து இங்கிருந்து போய்டுங்க என்று கோபப்படுகிறாள். 

இதையடுத்து வெற்றி அங்கிருந்து வருத்தத்துடன் கிளம்பி செல்கிறான். திரும்பி வந்த ;லட்சுமி வெற்றி குறித்து விசாரிக்க துளசி அவர் முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி சென்று விட்டதாக சொல்கிறாள். 

மறுபக்கம் மகேஷ் ஒரு கிப்டுடன் வீட்டிற்கு வருகிறான். தனியாக இருக்கும் உனக்கு ஒரு கிப்ட் வாங்கி வந்திருப்பதாக சொல்ல அஞ்சலி ஆர்வத்துடன் பாக்ஸை பிரிக்கிறாள். பேசும் பொம்மை ஒன்று இருக்க மகேஷ் ஐ லவ் யூ அஞ்சலி என்று சொல்ல பொம்மை அதை திருப்பி சொல்கிறது. 

பிறகு அஞ்சலி ஐ லவ் யூ டூ என்று சொல்ல பொம்மை அதையும் திருப்பி சொல்ல மகேஷ் அப்போ வாங்கி கொடுத்தவனுக்கு ஒன்னும் இல்லையா என்று ரொமான்டிக்காக பேசுகிறான். 

கோவிலுக்கு வெளியில் ரேவதி தனது அம்மாவுடன் கோவிலுக்கு போயிட்டு வர கடையில் இருந்த சின்ன பையன் என்ன அதே வேண்டுதலா என்று கேட்கிறான். ரேவதியின் அம்மா ரேவதி கல்யாணம் பற்றி வேண்டியதாக சொல்ல ரேவதி முதலில் உங்களுக்கு பார்வை தெரியணும். அதுக்கான ஆபரேஷன் தான் பர்ஸ்ட் என்று சொல்கிறாள்.

kettimelam

பிறகு துளசி வீட்டில் தியாவின் மருத்துவ செலவு குறித்து சொல்ல அண்ணன்கள் ரெண்டு பேரும் இதெல்லாம் தேவையில்லாத செலவு என்று சொல்ல பாட்டி என்னிடம் கொஞ்சம் பணம் இருப்பதாக சொல்கிறார். பாலமுருகன் ஓனரிடம் கேட்டு பணம் வாங்கி வருவதாக சொல்கிறான். சிவராம் தியா மருத்துவச்செலவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார்.

கோவிலுக்கு வெளியே வெற்றி சோகமாக இருக்க அங்கு வந்த அண்ணி மீனாட்சி நடந்த விஷயத்தை கேட்டறிகிறாள். இதுக்கே இப்படி சோர்ந்து உட்கார்ந்துட்டா எப்படி தம்பி? துளசியை இம்ப்ரெஸ் செய்ய என்ன பண்றதுனு யோசி என்று ஏற்றி விடுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க| 70 வயதில் 4ஆம் திருமணம்! அதுவும் தன்னை விட 29 வயது இளம் பெண்ணை கரம் பிடித்தவர்..

மேலும் படிக்க| கூலி படத்தின் டீசர் எப்போது? வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News