வீடு புகுந்து துளசியை மிரட்டும் ஜெகன்.. ஷாக் கொடுக்கும் வெற்றி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Kettimelam Today's Episode Update: மகேஷ் டாக்டர் கையை உடைக்க இன்னொரு பக்கம் துளசி வெற்றியுடன் ஹாஸ்பிடல் வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Keerthana Devi | Last Updated : Mar 27, 2025, 11:17 AM IST
    • ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் சீரியல்..
    • 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது..
    • இன்றைய எபிசோட் அப்டேட்..
வீடு புகுந்து துளசியை மிரட்டும் ஜெகன்.. ஷாக் கொடுக்கும் வெற்றி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம். 

Add Zee News as a Preferred Source

கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்:  மகேஷ் டாக்டர் கையை உடைக்க இன்னொரு பக்கம் துளசி வெற்றியுடன் ஹாஸ்பிடல் வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

kettimelam

கெட்டி மேளம் இன்றைய எபிசோட்:  அதாவது, வெற்றியும் துளசியும் ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்ததும் துளசி நான் ஆபிஸ் போகணும் என்று கிளம்புவதாக சொல்ல வெற்றி நீங்க ஆபிஸ் போய்ட்டா என்னை யாரு வீட்டுக்கு கூட்டிட்டு போவா என்று மடக்குகிறான். 

அடுத்து துளசியும் வெற்றியும் லட்சுமி வீட்டிற்கு வருகின்றனர், லட்சுமி வெற்றியை பார்த்து டாக்டர் என்ன சொன்னாங்க? என்று விசாரிக்கிறாள். மேலும் எல்லாருக்கும் நல்லது செய்யுற உன்னை யாரு வெற்றி அடித்தது என்று கேட்க வெற்றி அது எல்லாம் தெரிந்தவங்க தான் என்று சொல்ல துளசி அதிர்ச்சி அடைகிறாள். 

ஆனால் கடைசியில் வெற்றி அப்பாவுக்கு தெரிந்த எதிரி யாராச்சும் தான் இருக்கு என்று சொல்லி சமாளித்து விடுகிறான். மறுபக்கம் முருகன் கடையில் இருக்க ரேவதி உடம்பு முடியாததால் அவளது அம்மா வீட்டிற்கு போக சொல்கிறார். முருகன் ரெண்டு கடையையும் சேர்த்து பார்த்து கொள்கிறான். 

அடுத்ததாக ஜெகன் மற்றும் மோனிகா என இருவரும் கிளம்பி லாயருடன் துளசி வீட்டிற்கு வருகின்றனர். துளசியிடம் டாக்குமென்டில் கையெழுத்து போட சொல்லி சத்தம் போடுகின்றனர். மோனிகா தியா எங்கே என்று ரூமுக்குள் அவளை பார்க்க போக தியா பயந்து நடுங்குகிறாள். 

மோனிகா குழந்தையை எப்படி மாத்தி வச்சிருக்க பாரு என்று சத்தம் போடுகிறாள். அடுத்து ட்ரீட்மெண்ட் குறித்து விசாரிக்க துளசி டாக்டர் சொன்ன விஷயத்தை சொல்ல மோனிகா பணத்தை எடுத்து கொடுக்கிறாள். துளசி வாங்க மறுக்கிறாள். 

kettimelam

ஜெகன் பணத்தை வாங்கி கொள்ள சொல்லி சத்தம் போட வெளியே அக்காவுடன் பேசி கொண்டிருந்த வெற்றி சத்தம் கேட்டு வீட்டிற்குள் வருகிறான். வெற்றியை பார்த்ததும் ஜெகன் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

மேலும் படிக்க| மனோஜ் பாரதிராஜாவின் அதே சாயலில் அவரது மகள்கள்! வைரலாகும் குடும்ப போட்டோக்கள்..

மேலும் படிக்க| ஜஸ்வர்யா ராய் கார் மீது மோதிய பேருந்து.. நடந்தது என்ன?

About the Author

Trending News