அஞ்சலியின் சர்ப்ரைஸ்..டென்ஷனான மகேஷ், துளசி கொடுத்த ஷாக் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Kettimelam Today's Episode Update: மகேஷ் அஞ்சலிக்கு போன் போட்டு யாரிடம் பேசிட்டு இருந்த என்று கேட்க அஞ்சலி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு சீக்கிரமாக வாங்க என்று சொல்லி போனை வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Keerthana Devi | Last Updated : Mar 7, 2025, 03:54 PM IST
    • ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் சீரியல்..
    • 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது..
    • இன்றைய எபிசோட் அப்டேட்..
அஞ்சலியின் சர்ப்ரைஸ்..டென்ஷனான மகேஷ், துளசி கொடுத்த ஷாக் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். 

Add Zee News as a Preferred Source

கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: மகேஷ் அஞ்சலிக்கு போன் போட்டு யாரிடம் பேசிட்டு இருந்த என்று கேட்க அஞ்சலி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு சீக்கிரமாக வாங்க என்று சொல்லி போனை வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

கெட்டி மேளம் இன்றைய எபிசோட்:  அதாவது, துளசி வெற்றியிடம் ரோட்ல செப்பல் கொண்டு வந்து கொடுத்தது நீங்கதானே என்று கேட்க வெற்றி நானில்லை என்று சமாளிக்க முயற்சி செய்ய முகத்தை மூடிட்டு இருந்தா எனக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா இதெல்லாம் சொல்லவா என்று மிரட்டுகிறாள். 

kettimelam

அதைத்தொடர்ந்து மகேஷ் வீட்டுக்கு வர அஞ்சலி அவனுக்காக விதவிதமாக சமைத்து வைத்திருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறான். பிறகு டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார சிங்க்கில் பாத்திரங்கள் அனைத்தும் அப்படியே போட்டுக் கிடப்பதை பார்த்து டென்ஷன் ஆகிறான். 

எனக்கு இப்படி பாத்திரங்களை எல்லாம் துலக்காமல் போட்டு வச்சிருந்தா பிடிக்காது என்று அவனே போய் கழுவ தொடங்க அஞ்சலி நான் கழுவுறேன் என்று சொல்ல அதைக் கேட்காமல் மகேஷ் பாத்திரங்களை துலக்குகிறான். 

மறுபக்கம் பாலமுருகன் கடையில் இருக்க அப்போது ரேவதி அங்கு வருகிறாள். அவளது கண் பார்வையற்ற அம்மா செல்வி கல்யாணத்துக்காக ஏற்பாடுகளை செய்ய ரேவதி உனக்கு ஆபரேஷன் முடிஞ்சு கண்ணு தெரியாது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என சொல்கிறாள்.

பிறகு கவின் ரூமுக்குள் அஞ்சலி நினைத்து குடித்தபடி இருக்க அவனது செப்பல் வெளியே இருப்பதை பார்த்த அப்பா வரதராஜன் ரூம் கதவை தட்ட போதையில் இருக்கும் கவின் எதுவும் கேட்காமல் படுத்தபடி இருக்கிறான். பிறகு லைட்டாக போதை தெளிய அப்பா கதவை தட்டுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். 

kettimelam

சரக்கு பாட்டில்களை எடுத்து மறைத்து வைக்கும் போது ஒரு பாட்டில் உடையும் சத்தம் கேட்க வரதராஜன் என்ன பாட்டில் உடையும் சத்தம் கேட்குது என கோகிலாவிடம் விசாரிக்க கோகிலா மகன் கவின் குடிப்பது தெரிந்து விடுமோ என பதறுகிறாள். பிறகு கவின் கதவை திறக்க முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்து கிடப்பதை பார்த்து வரதராஜன் என்னாச்சு என்று கேட்க பெட்டில் இருந்து தவறி கீழே விழுந்து உடைந்து விட்டதாக சமாளிக்கிறான். 

kettimelam

வரதராஜன் உனக்கு ஒன்னும் இல்லையே என்று அவனிடம் நலம் விசாரித்துவிட்டு வெளியே செல்ல கோகிலா உங்க அப்பா உன் மேல எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்று பாரு நீ இப்படி குடிக்கிறதை பார்த்தால் அவரு உடைஞ்சு போயிடுவாரு என்று கண்ணீர் விடுகிறாள். 

கவின் இதை பார்த்து பீல் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க| ஆசனவாயில் திடீரென்று அரிப்பு வருகிறதா..பட்டுனு இதை செய்தால் சட்டுனு அரிப்பு நின்றுவிடும்!

மேலும் படிக்க| பூந்திக்கொட்டை தலைக்கு மட்டுமல்ல..இதுக்கும் பயன்படுத்தலாம்..குறிப்பாக இந்த விஷயத்துக்கு ரொம்ப நல்லது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News