Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம்.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: வெற்றி வீட்டில் ஒரு பக்கம் வெற்றி வீட்டில் நிச்சயம் ஏற்பாடு மறுபக்கம் துளசிக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு என நடைபெற்ற நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வெற்றி தனது வீட்டிற்கு வர பூஜை என நினைக்கிறான். கொஞ்ச நேரத்தில் முனுசாமி என் குடும்பத்தினர் வீட்டுக்கு வர வெற்றி அதிர்ச்சி அடைகிறான். பிறகு இது நிச்சயதார்த்த ஏற்பாடு என தெரிந்து மறுப்பு தெரிவிக்கிறான். ஆனால் ஈஸ்வரமூர்த்தி இது தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடியது என்று சொல்லி வெற்றியை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார்.

அடுத்ததாக கவின் ஒரு வழியாக வாட்ச் விஷயத்தில் அஞ்சலியை சமாளிக்கிறான். அதன் பிறகு துளசிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இன்னொரு பக்கம் வெற்றிக்கு நிச்சயம் நடந்து முடிகிறது.
வெற்றி சோகமாக உட்கார்ந்திருக்க மீனாட்சி அங்கு வர நீங்களாவது ஏதாவது செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்ல என்று கேட்க இது உங்க கல்யாணம் தம்பி.. நீங்கதான் ஏதாவது பண்ணனும் என்று ஏற்றி விடுகிறாள்.

வெற்றி துளசிக்கு போன் செய்து காதலை சொல்ல முடிவு செய்கிறான். துளசிக்கு போன் செய்ய அவள் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை சொல்கிறாள். இதனால் வெற்றி அதிர்ச்சி அடைகிறான். அடுத்ததாக துளசியை திருமணம் செய்து கொள்ள உள்ள மாப்பிள்ளை மோனிகாவை சந்திக்க இவை அனைத்தும் மோனிகாவின் சதி என்பது தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க| சூர்யாவின் சம்பவமா..சூர்யாவுக்கு சம்பவமா? ரெட்ரோ படம் எப்படி? X தள விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









