Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம்.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: எபிசோடில் லட்சுமி துளசி கல்யாணத்திற்காக கடன் கேட்க சொல்ல சிவராம் செய்வதறியாது தவித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, முருகன் லக்ஷ்மியை கடைக்கு கூட்டி செல்ல அப்போது கையில் காப்பு இருப்பதை கவனித்து இது என்னடா புதுசா இருக்கு என்று கேட்கிறாள். முருகன் ரேவதி வாங்கி கொடுத்ததாக சைகையில் சொல்கிறான். பிறகு ரேவதிக்காக ஒரு கொலுசு எடுத்து கொடுக்க சொல்லி கேட்க லட்சுமி ஒரு கொலுசை தேர்வு செய்து கொடுக்கிறாள்.
பிறகு முருகன் நேராக கோவிலுக்கு வந்து ரேவதியை சந்தித்து அவளது காலில் கொலுசை போட்டு விட ரேவதி சந்தோஷமடைகிறாள். அடுத்து லட்சுமி வீட்டிற்கு வர துளசி குனியும் போது தாலி கீழே வந்து விழ இதை கவனித்து அதிர்ச்சி அடைகிறாள்.
ஆனால் துளசியாக விஷயத்தை சொல்லட்டும் என எதுவும் கேட்காமல் அதிர்ச்சியில் அமைதி காக்கிறாள். கோவிலுக்கு சென்று கடவுளிடம் அழுது புலம்புகிறாள். வரும் வழியில் சிவராமனை அவரது நண்பருடன் பார்க்கில் பார்க்க லக்ஷ்மியை பார்த்த அவர் அதிர்ச்சி அடைகிறார்.
லட்சுமி ஆபிஸ் போகாமல் இங்க என்ன பண்றீங்க என்று விசாரிக்க ஆபிஸ் விஷயமாக வந்ததாக சொல்லி சமாளிக்கிறார். பிறகு வீட்டிற்கு வந்த சிவராமன் என்ன வழக்கத்துக்கு மாறா முருகன் இப்போ எல்லாம் ரொம்ப சந்தோசமாக இருக்கான், என்ன விஷயம் என்று விசாரிக்க லட்சுமி துளசி கழுத்தில் தாலியை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறாள். அதுகுறித்து யோசித்தபடி இருக்கிறாள்.
சிவராமன் தட்டி எழுப்பி என்னவென்று கேட்க துளசி கல்யாணத்தை பற்றிய யோசனையில் இருப்பதாக சமாளிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க| சினிமா ஜோடி ரியல் ஜோடியானது! கல்யாணக் கொண்டாட்டம் நோக்கி விஷால் & தன்ஷிகா....
மேலும் படிக்க| அவரை பளார்னு அறைஞ்சு இருக்கனும் - கோபத்துடன் பேசிய தொகுப்பாளினி ஐஸ்வர்யா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ