Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம்.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்:துளசிக்கு தனித்தனியாக நடக்க துளசியை திருமணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை மோனிகா ஏற்பாடு செய்த ஆள் என்பது தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, முருகன் கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வர அஞ்சலி மகேஷ் வீட்டில் இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறான். முருகனைப் பார்த்ததில் மகேஷ்க்குள் டென்ஷன் அதிகமாகிறது.

இதையடுத்து ஈஸ்வரமூர்த்தி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்கிறார். கோவில் தர்மகத்தாவான வரதராஜனை சந்தித்து இந்த திருவிழாவுக்கு எல்லாரும் கண்டிப்பா வரணும் என்று அழைப்பு கொடுக்க வரதராஜன் வீட்டில் உள்ள எல்லோரும் திருவிழாவுக்கு போகணும் என்று சொல்கிறார்.
பிறகு மகேஷ் ரூமுக்கு டென்ஷனாக உட்கார்ந்து இருக்க அஞ்சலி என்னாச்சுங்க உங்களுக்கு இங்கே வசதி பத்தலையா என்று கேட்க மகேஷ் அதெல்லாம் இல்ல அஞ்சலி உன்கூட இருக்கிறது தான் எனக்கு மிகப்பெரிய வசதி. அதுதான் எனக்கு சந்தோஷம் என்று சொல்ல அஞ்சலி சந்தோஷம் அடைகிறாள்.

இதையடுத்து கேசவன் கந்துவட்டி பிரச்சனையில் சிக்கித் தவிக்க பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறான். இன்னொரு பக்கம் ரகுராம் தனது மனைவி கவிதாவை அழைத்துக் கொண்டு வீட்டில் பொய் சொல்லிவிட்டு வெளியே கிளம்பலாம் என்று சொல்ல கவிதா பொய் சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள்.
அடுத்ததாக வெற்றி தனது நண்பர்களிடம் என்னதான் நடந்தாலும் துளசி தான் என்னுடைய மனைவி என சொல்கிறான். ஆனால் நண்பர்கள் அது தான் உனக்கு நிச்சயமா ஆயிடுச்சு. அவங்க தானே உன்னுடைய மனைவி ஆவாங்க என்று சொல்ல வெற்றி மறுக்கிறான். இந்த சமயத்தில் வெற்றிக்கு திவ்யாவிடம் இருந்து போன் வருகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க| இதனால் தான் கவுண்டமணி - செந்தில் பிரிந்தார்களா? சோகத்தில் முடிந்த வெற்றி கூட்டணி!
மேலும் படிக்க| ஒரே மாதிரி இருக்கு.. டிடியை உடை மாற்ற சொன்ன நடிகை நயன்தாராவா? அவரே சென்ன விஷயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









