கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அஞ்சலியை வேவு பார்க்கத் தொடங்கும் மகேஷ்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 21, 2025, 04:28 PM IST
  • கெட்டி மேளம் இன்றைய எபிசோட்.
  • வெற்றியை திட்டும் துளசி.
  • கவின் நம்பரை ட்ரேஸ் செய்யும் மகேஷ் பிஏ.
கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அஞ்சலியை வேவு பார்க்கத் தொடங்கும் மகேஷ்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கெட்டி மேளம்’ சீரியல்.

Add Zee News as a Preferred Source

கெட்டி மேளம் : இன்றைய எபிசோட் 

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கவின் பற்றி தெரிந்து கொண்ட மகேஷ் யார் அவன் என அவனை பார்க்க வேண்டும் என்று டென்ஷனான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மகேஷ் யார் அந்த கவின் அவனை எப்படி ஆச்சு தேடி கண்டு பிடிக்கணும் என யோசிக்கிறான். இந்த சமயத்தில் அவன் கண் முன் தோன்றும் மனசாட்சிகள் அஞ்சலிக்கு உன் மேல லவ் கிடையாது. உன்னை விட அவளுக்கு கவினை தான் ரொம்ப பிடிக்கும் என்று சொன்னதும் மகேஷ் இன்னும் டென்ஷன் ஆகிறான். 

வெற்றியை திட்டும் துளசி

இன்னொரு பக்கம் துளசி பஸ்ஸுக்காக வெயிட் செய்து கொண்டிருக்க அந்த வழியாக வந்த வெற்றி என்ன மேடம் பஸ் வரலையா நான் வேணும்னா டிராப் பண்ணவா என்று கேட்க துளசி அவனை திட்டி விடுகிறாள். 

அதன் பிறகு மகேஷ் தனது பிஏவை கூப்பிட்டு கவினின் போன் நம்பரை கொடுத்து இந்த போன் நம்பருக்கு குறித்து விசாரிக்க சொல்கிறான். அந்த போனுக்கு எங்க இருந்து மெசேஜ் வந்தது என்ன என்ற விவரங்களை சேகரிக்க சொல்கிறான். 

அடுத்து கவின் மற்றும் அவரது அப்பா நடிகர் மாற்றம் பிடித்த அறிமுகம் செய்யப்படுகிறது. கவின் அப்பா இனிமேலாவது ஒழுங்கா படி என்று சொல்ல கவின் இனிமே ஒழுங்கா இருப்பேன் என வாக்கு கொடுக்கிறான். அதைத்தொடர்ந்து கவினின் முறை பெண் பிரீத்தி என்பவர் அறிமுகம் ஆகிறார். 

கவின் மீது காதல் கொண்ட பிரீத்தி அவன் அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு எனக்கு படிப்பு முடிஞ்சிடுச்சு இனிமே சந்தோஷமாக இருக்க போறேன் என்று சொல்கிறாள். கவினின் அம்மா அவளுக்கு சாப்பாடு ஊட்ட பிரீத்தி கவின் சாப்பிட்டாதான் சாப்பிடுவேன் என அடம் பிடிக்கிறாள். 

கவின் நம்பரை ட்ரேஸ் செய்யும் மகேஷ் பிஏ

அடுத்ததாக இங்கே கவின் நம்பரை ட்ரேஸ் செய்து தகவல்களை எடுத்த மகேஷ் பி ஏ அவனுக்கு ஒரு நம்பர் இருந்தது அதிகமாக மெசேஜ் போயிருப்பதாக சொல்லி அந்த நம்பரை கொடுக்க அது அஞ்சலியின் நம்பர் எனக்கு தெரிந்து மகேஷ் கடுப்பாகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | 51 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. யார் தெரியுமா?

மேலும் படிக்க | குட் பேட் அக்லி : பிரியா வாரியருக்கு பதில் நடிக்க இருந்த 23 வயது நடிகை! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News