கமல்ஹாசன்-ஹெச்.வினாத் படத்தின் பெயர் இதுதானா..?
KH 233 Title: கமல்ஹாசனை வைத்து ஹெச்.வினோத் இயக்கி வரும் படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் ‘டாப்’ இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருகிறார், ஹெச்.வினோத். சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், கடைசியாக துணிவு படத்தை இயக்கியிருந்தார். இவர், அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
KH 233 திரைப்படம்:
கோலிவுட்டின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், தற்போது புதிதாக வரும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த வகையில், இவர் ஹெச்.வினோத்தின் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இது, கமல்ஹாசனின் 233வது படமாகும். தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார், கமல். இப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனை வைத்து ஹெச்.வினோத் இயக்க இருக்கும் கதை, அரசியல், ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இன்னும் சில நாட்களில் இதன் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதான் டைட்டிலா..?
ஹெச்.வினோத் இயக்கும் KH 233 படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “தலைவன் இருக்கின்றான்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது கமலின் கதையா..?
நடிகர் கமல்ஹாசன், தான் நடிக்கும் படங்களின் கதைகளில் அதிகமாக தன்னுடைய பங்களிப்பையும் கொடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போலத்தான், ஹெச்.வினோத்தின் கதையிலும் தனது அதீத பங்களிப்பை கமல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர், பல வருடங்களுக்கு முன்னர் “தலைவன் இருக்கின்றான்” என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க இருந்தார். ஆனால், அந்த படம் பாதியில் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கதைத்தான் தற்போது ஹெச்.வினோத்தின் படமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால்தான் இப்படத்திற்கு “தலைவன் இருக்கின்றான்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மா வாங்கிய சம்பளம் இவ்வளவா!
நடிகர்கள்..
KH 233 படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. துணை நடிகராக இருந்து, ஹீரோவாக வளர்ந்து, தற்போது பான் இந்தியாவின் வில்லன் நடிகராக உயர்ந்து நிற்பவர் விஜய் சேதுபதி. இவரையடுத்து தமிழ் திரையுலகின் காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கமலுக்கு ஜோடியான நயன்தாரா:
கமல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. முதலில், இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க த்ரிஷா மற்றும் வித்யா பாலன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்றதாகவும் ஏதோ சில காரணங்களுக்காக அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கோலிவுட்டில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஹீரோயினாக வலம் வருபவர், நயன்தாரா. அவர் இதுவரை கமலுடன் சேர்ந்து எந்த படத்திலும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அர்ஜூனின் மகளுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்! ‘இந்த’ நடிகரின் மகன்தான் மாப்பிள்ளை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ