)
Kuraishi Mocked Madhampatty Rangaraj Video : இணையத்தில் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு நபராக இருக்கிறார், மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தனக்கு அனுப்பிய வீடியோ ஒன்றை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். தற்போது இதே போல குரேஷி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்த காலத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோ ஒன்றை ஜாய் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். “ஓய் பொண்டாட்டி..என்னடி பன்ற? காபி குடிச்சிட்டேன், இன்டர்வியூக்கு போகப்போறேன்..மிஸ் யூ, லவ் யூ” என்று அவர் பேசியிருந்த வீடியோ இணையத்தில் ரொம்ப வைரலானது. இதில் அவர், “இப்படியெல்லாம் பேசும் ஒருவர், தனது கர்ப்பமான மனைவியை முதுகில் குத்தவும் செய்வார்” என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை பலரும் கலாய்த்து வந்தனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருக்கிறார். இதில் அவரை மறைமுகமாக சில சமயம் கோமாளியாக இருக்கும் குரேஷி கலாயப்பதுண்டு. ஜாய் வெளியிட்டிருந்த வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜ் எப்படி பேசனாரோ அதே போல குரேஷியும் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு வாழ்த்து தெரிவிப்பது போல மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்து அவர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
ரங்கராஜின் கமெண்ட்..
குரேஷி இப்படியொரு வீடியோவை வெளியிட்டது, தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் அதில் கமெண்ட் செய்ததும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

“டேய், ரொமான்ஸ் பத்தல டா!! 2 வாரம் என்கிட்ட ட்ரைனிங் வா டா” என்று அவர் செய்திருக்கும் கமெண்டிற்கு கீழ், பலர் ரிப்ளை செய்து வருகின்றனர். ஒரு சிலர், “கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?” என்று கேட்டு வருகின்றனர்.
ஜாய் கிரிஸில்டா பகிர்ந்த விஷயம்!
ஜாய் கிரிஸில்டா, சில நாட்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்தார். அதில், தானும் மாதம்பட்டி ரங்கராஜும் 2023ல் சந்தித்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன் மனைவியுடன் சட்டப்பூர்வமான பிரிவு காலத்தில் இருப்பதாக கூறிய ரங்கராஜ் இன்னும் சில நாட்களில் அவரிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாக கூறியதால், தான் அவரை திருமணம் செய்ய சம்மதித்ததாகவும் ஜாய் தெரிவித்துள்ளார்.
தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய ஜாய், தன் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை என்றும் தெரிவித்தார். தனக்கும் தன் குழந்தைக்கும் மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து உரிமை வேண்டும் என்றும் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது குறிப்பிட்டார்.
மவுனம் காக்கும் மாதம்பட்டி!
மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை சுற்றி வரும் சர்ச்சை குறித்து, இந்நாள் வரையில் எதுவும் பேசாமல் இருக்கிறார். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதும், சமையலை ஜட்ஜ் செய்வதுமாய் இருக்கிறார். இவர் இப்படியே பேசாமல் இருந்தால், இதை பேசுவதை மக்கள் மறந்து விடுவர் என்று அவர் நினைப்பதாக மக்கள் சிலர் கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ