Kushboo Weight Loss Tips: ஸ்லிம் ஆன நடிகைகள் கொடி கட்டி பறந்த காலகட்டத்தில் குண்டான பெண்களும் அழகு தான் என அனைவரின் எண்ணத்தையும் மாற்றியவர் குஷ்பூ.

நடிகை குஷ்பூ என்றாலே அவரது கொழு கொழு தோற்றம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். அப்படி chubbyயாக இருக்கும் குஷ்பூ, இப்போது அடையாளமே தெரியாமல் ஸ்லிம் ஆகி அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார். அவர் 20 கிலோ வரை எடை குறைத்தது எப்படி? அந்த ரகசியம் என்ன? குஷ்பூ சொன்ன சீக்ரெட் இதோ!
90’ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகை தான் குஷ்பூ. நதியா, ராதா, ரேவதி, ரேகா என ஸ்லிம் ஆன நடிகைகள் கொடி கட்டி பறந்த காலகட்டத்தில் குண்டான பெண்களும் அழகு தான் என அனைவரின் எண்ணத்தையும் மாற்றியவர் குஷ்பூ. அப்படிபட்டவர் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல உடல் நல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். அவருக்கு முழங்காலில் பலமுறை அறுவைசிகிச்சையும் நடைபெற்றுள்ளது. அப்போது தான் மருத்துவர்கள் அவரை உடல் எடையை குறைக்கச் சொல்லி அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். அதனால் ஒரு வருடத்துக்குள் அவர் 20 கிலோ குறைத்துள்ளார். அதன்பின் தொடர்ந்து தனது நியூ லுக் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பலரையும் மிரள செய்துள்ளார்.

பலரும் அவரிடம் ஊசி மூலம் உடல் எடையை குறைத்தீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதாவது உடல் எடை குறைப்பு ஊசிகள் எடுத்தீர்களா என கேட்டனர். அதற்கு பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ள குஷ்பூ, தினமும் காலை ஒரு மணி நேரம் உடற்பயிற்சியும், மாலை 45 முதல் 50 நிமிடங்கள் நடைபயிற்சியும் செய்வதாகவும், மாலை நடைபயிற்சி செய்ய முடியவில்லை என்றால் 1 மணி நேர உடற்பயிற்சியை கூடுதலாக செய்வார் என்றும் கூறியுள்ளார். அதோடு ஒழுக்கமான உணவுப்பழக்கம், நிலையான உடற்பயிற்சி முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். செயற்கை முறையில் எடையை குறைக்காமல் இயற்கையாக உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் எடையை குறைத்துள்ளார் குஷ்பூ.
.
எதை செய்தாலும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் தனக்கு 20 கிலோ எடையை குறைக்க 1 ஆண்டு ஆனது என்றும் அவர் கூறியுள்ளார். இப்போதெல்லாம் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு ஸ்லிம் ஆக ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார் குஷ்பூ. உடல் எடையை குறைக்கும் ஆசை மட்டும் போதாது, அதற்காக உழைக்கவும் வேண்டும் என்பது தான் உண்மை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ