Anchor Priyanka Recent Post After Leaves Fans Shocked : பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, சமீபத்தில் இணையத்தில் பதிவிட்டுள்ள போட்டோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

Anchor Priyanka Recent Post After Leaves Fans Shocked : தமிழ் டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் மிகப்பெறிய தொகுப்பாளராக வலம் வருபவர், பிரியங்கா தேஷ்பாண்டே. சமீபத்தில் திருமணம் முடித்த இவர், தற்போது ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
பிரியங்கா தேஷ்பாண்டே:
தமிழ் சின்னத்திரை உலகில் மிக முக்கிய இடம் பெற்ற தொகுப்பாளராக வலம் வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரது கலகல பேச்சும், துரு துரு செய்கையும் பலருக்கும் பிடிக்கும். சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக், தி வால் என பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவரும் இவரது இணை தொகுப்பாளர் மாகாபா ஆனந்தும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் பெரிதும் ரசிக்கும்படியாக இருக்கும்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் வீணாக தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா, பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பாளராக இருந்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப் பட்டம் பெற்ற இவர், குக் வித் கோமாளி சீசன் 5விலும் வெற்றியாளராக மாறினார்.
திருமணம்:
பிரியங்கா, கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வசி சச்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதை இவருக்கு இரண்டாவது திருமணம் ஆகும். 2016ஆம் ஆண்டில் பிரவீன் குமார் என்பவரை காதலித்து மணந்த இவர், சில ஆண்டுகளிலேயே அவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.
வசி, திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளுக்கு டிஜே கலைஞராக இருக்கிறார். இவரும் பிரியங்காவும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டதாகவும், உழைப்பு நட்பாக மாறி பின்னாளில் காதல் ஆனதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 மாதங்கள் ஆக இருக்கிறது.
பிரியங்காவிற்கு என்ன ஆச்சு?
திருமணம் முடிந்ததில் இருந்து, பிரியங்கா மகிழ்ச்சியாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார். லண்டனுக்கு ஹனிமூன் சென்ற இவர், தனது திருமணம் முடிந்த ஒரு சில தினங்களில் தனது நண்பர்கள் அமீர்-பாவனி திருமணத்திலும் கலந்து கொண்டார்.
பிரியங்கா, சமீபத்தில் போட்டிருக்கும் ஒரு போட்டோதான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. அவருக்கு காலில் fracture ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இவரது ரசிகர்கள் பலர், “கண்ணு பட்டுருச்சு..சுத்தி போட்டுக்கோங்க..” என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர், “திருமணம் முடிந்த 2 மாசத்துக்குள்ள இப்படி ஆயிருச்சே..” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரியங்கா சந்தித்த விமர்சனங்கள்..
தொகுப்பாளர் பிரியங்கா, திருமணம் செய்து கொள்வதற்கு முன்பும் சரி, அதன் பிறகும் சரி, பலவித விமர்சனங்களை சந்தித்தார். உருவ கேலி, மணிமேகலை பிரச்சனை என்று இவர் தன் வாழ்க்கை குறித்து வெளியில் எதுவும் பேசவில்லை என்றாலும் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்த வண்ணம் இருக்கின்றது.
இப்போது வசியை திருமணம் செய்து கொண்ட போதும் கூட, அவர் வயதானவரை திருமணம் செய்து கொண்டதாக கூறி சிலர் ட்ரோல் செய்தனர். ஆனால், ஒரு சிலர் “அது அவருடைய வாழ்க்கை, அவர் இஷ்டம் போல வாழட்டுமே” என்று கூறி பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ