)
Robo Shankar Priyanka Dance Reason : மக்களை தனது திறமையால் சிரித்து மகிழ வைத்தவர், ரோபா சங்கர். இவர், சமீபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில் மனைவி பிரியங்கா ஆடியது பெரிய விவாதத்தையே கிளப்பியது.
ரோபோ சங்கர் உயிரிழப்பு!
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் வாய்ப்பட்டு உடல்நலக்குறைவுக்கு ஆளானார். இதையடுத்து, கட்டுமஸ்தான உடலுடன் இருந்த அவர், இதற்கு பிறகு பாதியாக இளைத்து போனார். பின்னர், உடலை கொஞ்சம் தேற்றிக்கொண்டு, அதன் பிறகு மீண்டும் சினிமாவில் கம்-பேக் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அனுமதிக்கப்பட்ட இரு நாட்களிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
தனது குடும்பத்திற்கு எல்லாமுமமாக இருந்த ரோபா சங்கர், திடீரென்று இப்படி உயிரிழப்பார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் இறுதி ஊர்வலத்தில் வந்து போன உறவினர்களையும் பிரபலங்களையும் கட்டிப்பிடித்து அழுத காட்சிகள் பலரை கண்கலங்க வைத்தது.
இறுதி ஊர்வலத்தில் ஆடிய ரோபாே சங்கர் மனைவி!
நம் நாட்டில் உள்ள பல வழக்கங்களில் ஒருவரது இறுதி சடங்கை, அவரவர் முறைப்படி நடத்துவது வழக்கம். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இறுதி சடங்குகளில் மேள தாளங்களை வைத்து, பலர் ஆடி இறந்தவரை வழியனுப்புவது வழக்கம். பிரியங்கா, தனது கணவர் இறப்பிலும் இதையே செய்தார். இது, வீடியோவாக இணையத்தில் பெரிதாக வைரலானது. பலர், அவர் துக்கத்தில் அப்படி ஆடுவதாக கூற, ஒரு சிலர், ‘கணவர் இறந்த துக்கத்தில் இவங்க எதுக்கு இந்த ஆட்டம்?’ என்று கொச்சையாக பேசினர். இது குறித்து சில முற்போக்கான நபர்கள் பேசுகையில் இது தவறில்லை என்று கூறினாலும் பலர் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. தற்போது, ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவே இதற்கு பதிலளித்துள்ளார்.
இந்திரஜாவின் பதில்!
ரோபாே சங்கருக்கு சமீபத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ரோபாே சங்கரின் குடும்பத்தினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, இறுதி ஊர்வலத்தில் பிரியங்கா நடனமாடியது சர்ச்சையானது குறித்து கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு இந்திரஜா, “என் அம்மா அன்பை நடனம் ஆடுவதன் மூலம் வெளிப்படுத்துவார். நான் பார்த்து வளர்ந்த போதில் இருந்தே அப்படித்தான். அப்பாவை கடைசியாக சாமிக்கிட்ட அனுப்பி வைக்கும் போதும் அம்மா நடனம் ஆடியதை, அன்பின் வெளிபாடாகத்தான் பார்க்கிறோம். அதை நீங்க விமர்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் புரிதல் அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ