Court Orders Vishal To Pay 21 Crores To Lyca Productions : நடிகர் விஷால், தனது பட தயாரிப்பு நிறுவனத்துக்காக அன்பு செழியனிடம் கடன் பெற்றது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான விவரத்தை இங்கு பார்ப்போம்.

Court Orders Vishal To Pay 21 Crores To Lyca Productions : நடிகர் விஷால், தனது பட தயாரிப்பு நிறுவனத்துக்காக லைகா நிறுவனத்திடம் கடன் வாங்கியது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணை:
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர் விஷால், தனது படத்தயாரிப்பு நிறுவனத்துக்காக லைகா நிறுவனத்திடம் கடன் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணை, பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விஷால், சினிமா தயாரிப்பாளர் அன்பு செழியனிடம் கடன் பெற்றுள்ளார், அதனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியிருக்கிறது. இதனை, திருப்பி தரவில்லை என லைகா நிறுவனம் வழக்கு தொடுத்தது. விஷால், வட்டியுடன் தங்களிடம் வாங்கிய கடனை திரும்ப தர வேண்டும் என்று லைகா நிறுவனம் வாதிட்டது.
தீர்ப்பு:
விஷால் vs லைகா நிறுவனம் தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21.26 கோடியை 30% வட்டியுடன் நடிகர் விஷால் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என்ன பிரச்சனை?
பிரபல நடிகர் விஷால், தனது ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக ஃபைனான்சியர் அன்பு செழியனின் பட தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.21.29 கோடியை கடனாக பெற்றிருக்கிறார். இதனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.இந்த தொகையை முழுமையாக செலுத்தும் வரை, விஷால் தயாரிக்கும் படங்களின் உரிமையை, லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், நடிகர் விஷால், இந்த ஒப்பந்தத்தை மீறி சில படங்களை வெளியிட்டதாக லைகா நிறுவனம் கூறியிருக்கிறது. இதை வைத்தும், அந்த ரூ.21 கோடிக்கும் மேலான தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடுத்தது.
தீர்ப்பு:
முன்னர், இது தொடர்பான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் விஷால் 15 கோடியை டெப்பாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அப்படி செலுத்தவில்லை என்றால், விஷால் தயாரிக்கும் படங்கள் திரையரங்கிலோ ஓடிடியிலோ வெளியாகாது என்று உத்தரவிடப்பட்டது.
விஷால் vs லைகா நிறுவனம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்ததை ஒட்டி, நீதிபதி பி.டி.ஆஷா இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 21.29 கோடியை 30% வட்டியுடன் விஷால் திரும்ப செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ