ரவி மோகனுக்கு ஆர்த்தி போட்ட கண்டீஷன்! விவாகரத்து கொடுக்க ‘இதை’ தரணுமாம்..

Aarti Ravi Asked 40 Lakhs Alimony : நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு, தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்றைய விசாரணையில் ஆர்த்தி ரூ.40 லட்சத்தை ஜீவனாம்சமாக கேட்டிருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : May 22, 2025, 12:58 PM IST
  • ரவி மோகனுக்கு ஆர்த்தி போட்ட கண்டீஷன்!
  • ரூ.40 லட்சம் ஜீவனாம்சம்..
  • எதிராக திரும்பிய ரசிகர்கள்..
ரவி மோகனுக்கு ஆர்த்தி போட்ட கண்டீஷன்! விவாகரத்து கொடுக்க ‘இதை’ தரணுமாம்..

Aarti Ravi Asked 40 Lakhs Alimony :  கடந்த சில நாட்களாகவே, ரவி மோகன்-ஆர்த்தி இடையேயான பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்த நிலையில், இவர்களின் விவாகரத்து வழக்கின் விசாரணை, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ஆர்த்தி ரூ.40 லட்சம் ஜீவனாம்சமாக கேட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

அறிக்கைக்கு மேல் அறிக்கை..

நடிகர் ரவி மோகன் (எ) ஜெயம் ரவி, தனது மனைவியை கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்ததில் இருந்து அவரை சுற்றி சர்ச்சைகள் சூழந்திருக்கிறது. பிரிவிக்கு பின், ‘தோழி’ என கூறிய கெனிஷாவுடன், சமீபத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து அவரது மனைவி ஆர்த்தி, தங்களுக்கு இன்னும் விவாகரத்து நடக்கவில்லை என்றும், இன்னும் தான் அவரது மனைவிதான் என்றும் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். மேலும், தாங்கள் வாழும் வீட்டை விட்டு வெளியேறக்கூறி அவர் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் கூறினார்.

ஆர்த்தியின் அறிக்கைக்கு பதிலாக, ரவி மோகன் இன்னொரு அறிக்கையை வெளியிட்டார். அதில், தான் மனம், உடல், நிதி ரீதியாக ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தாரால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். கெனிஷாவை தன் வாழ்வின் ஒளி என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நடுவில் ரவி மோகனின் மாமியார் சுஜாதா ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கையும், சமீபத்தில் ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு..

ரவி மோகன்-ஆர்த்தியின் திருமண விவாகரத்து குறித்த வழக்கு, மே 21ஆம் தேதியான நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ரவி மோகன் நேரில் ஆஜரானார். இதில், ஆர்த்தி ரவி மோகனிடமிருந்து மாதம் ரூ.40 லட்சம் தனக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்று, மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு ரவி மோகன், பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த விசாரணையை ஜூன் 12ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிராக திரும்பிய ரசிகர்கள்..

ரவி மோகன் விஷயத்தில், விவாகரத்திற்கான காரணமாக அவர் கூறிய விஷயங்களை கேட்ட ரசிகர்கள் முதலில் அவருக்குதான் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், எப்போது கெனிஷாவுடன் அவர் சுற்ற ஆரம்பித்தாரோ அப்போது முதல் அவரை பழித்து ரசிகர்கள் பதிவுகளை வெளியிட ஆரம்பித்தனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கெனிஷாதான். இவரால்தான் ரவி மோகனின் வாழ்க்கை கெட்டுப்போனதாக சிலர் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். ஆர்த்தி கூட, தனது சமீபத்திய பதிவில் திருமண விவாகரத்து பேச்சுக்கு முன்பிருந்தே கெனிஷா ரவி மோகனின் வாழ்க்கையில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இத்தனை நாட்களாக, ஆர்த்திக்கு அனைவரும் ஆதரவாக நிற்க, அவர் ரூ.40 லட்சம் வேண்டும் என்று எப்போது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாரோ, அப்போதிருந்து அவருக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, “இவரை போன்றவரை ரவி மோகன் விட்டு சென்றதில் தவறே இல்லை” என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

ரவிக்கும் ஆர்த்திக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இந்த உறவில் இருந்து அவர்களுக்கு ஆரவ், அயான் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

மேலும் படிக்க | பிரபல நடிகருடன் உறவில் ஆர்த்தி ரவி? உண்மை வெளிவருவது எப்போது? பிரபலம் சொன்ன தகவல்!

மேலும் படிக்க | நன்றாக வளர்ந்து விட்ட ஜெயம் ரவியின் 2 மகன்கள்! ஆர்த்தி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News