Aarti Ravi Statement About Ravi Mohan : நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் கைக்கோர்த்து திருமணம் ஒன்றில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது மனைவி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

Aarti Ravi Statement About Ravi Mohan : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர், ரவி மோகன். கடந்த ஆண்டு திருமண விவாகரத்து சரச்சையில் சிக்கிய இவர், இப்போது தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அவர் தற்போது புதிதாக ஒரு பெண்ணுடன் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து அவரது மனைவி ஆர்த்தி ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
ரவி மோகன்:
கடந்த ஆண்டு வரை ‘ஜெயம் ரவி’ என்று அழைக்கப்பட்டு வந்தவர், ரவி மோகன். ஜெயம் படத்தில் அறிமுகமானதால் அவருக்கு அந்த படத்தின் பெயரை அடைமொழியாக சேர்ந்து கொண்டது. ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இனி தன்னை அனைவரும் ரவி மோகன் என்றுதான் அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பெயரை மாற்றியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்த ரவி மோகன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரணியம், ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்கள் மூலம் மக்களின் மனங்களில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், தனி ஒருவன் படத்திற்கு பிறகு அவருக்கு கம்-பேக் படங்களாக எதுவுமே அமையவில்லை. அவர் ஹிட் ஆகும் என்று நினைத்த திரைப்படங்கள் எல்லாம் கடைசியில் அவருக்கு தோல்வியைத்தான் கொடுத்தன.
விவாகரத்து:
ரவி மோகன், ஆர்த்தியை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடையது காதல் திருமணம் என்று கூறப்படுகிறது. அடிக்கடி இருவரும் ஒன்றாக நேர்காணலில் கலந்து கொள்வது, பாேட்டோக்கள் வெளியிடுவது என்றிருந்தனர். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகள் இருந்தது என்பதை யாருமே அறியவில்லை. இவர்களுக்கு ஆரவ்-அயான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனாலேயே இவர்களின் திருமண விவாகரத்து அறிவிப்பு வெளியான போது அது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவியை பிரிவதாக அறிவித்தார். அதன் பின்பு ஆர்த்தி ரவி, இந்த அறிவிப்பு தனக்கு தெரிவிக்கப்படாமல் வெளியானதாக கூறினார். ஆர்த்தி, இந்த அறிவிப்பு தனக்கு தெரிவிக்கப்படாமல் வெளியானதாக தெரிவித்தார். இதனால் இவர்களின் குடும்பத்தை சுற்றி சர்ச்சைகள் சூழ்ந்தது.
புது காதல்?
ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில், இன்னொரு விஷயமும் வெளியானது. அது ஒரு புகைப்படம் ஆகும். இதில் அவர் கோவாவை சேர்ந்த கெனிஷா என்ற பாடகியுடன் இருந்தார். இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து அனைத்து ஊடகங்களும் இருவரும் காதலிக்கின்றனரா என கிசுகிசுக்களை பரப்ப தொடங்கின. இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்றும், அதைத்தாண்டி தங்களுக்குள் ஒன்றும் இல்லை என்றும் கூறினர். சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமனம் நடந்தது. இதில், கோல்டன் நிற ஆடை அணிந்து ரவி மோகனும் கெனிஷாவும் கலந்து கொண்டனர். போதாக்குறைக்கு இருவரும் கைக்கோர்த்துக்கொண்டு வேறு சென்றனர். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் காலையில் இருந்து வைரலாகி வருகிறது. இதனால் பலர் இருவரும் காதலித்து வருவதாக மீண்டும் கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.
ஆர்த்தி அறிக்கை:
ஆர்த்தி, ரவி மோகன் குறித்து ஒரு பரப்பான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், தான் இத்தனை நாட்களாக அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்ததாகவும், இனி தன்னால் அப்படி இருக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். 18 வருடமாக அனைத்து விஷயங்களிலும் தான் துணையாக இருந்த தனது கணவர் இன்று அவரது பொருப்புகளில் இருந்து தவறியிருப்பதாக கூறியிருக்கிறார்.
ஆர்த்தியும் அவரது மகன்களும் தங்கியிருந்த வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்படுள்ளதாக ஆர்த்தி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
என்ன கூறியிருக்கிறார்?
இத்தனை நாட்கள் நான் மௌனமாக இருந்ததற்கு காரணம், பலவீனமாக இருந்ததால் அல்ல, அமைதி தேவைப்பட்டதால்தான். என் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும் கொடூரமான கிசுகிசுப்பையும் நான் உள்வாங்கிக் கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை - எனக்கு உண்மை இல்லாததால் அல்ல, ஆனால் என் குழந்தைகள் பெற்றோருக்கு இடையே தேர்ந்தெடுக்கும் சுமையைச் சுமக்க விரும்பவில்லை என்பதால்.
எனது விவாகரத்து இன்னும் தொடர்கிறது. ஆனால், 18 ஆண்டுகளாக நான் அன்பிலும், விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் துணையாக இருந்தவர் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை, ஆனால் அவர் ஒரு காலத்தில் கௌரவிப்பதாக உறுதியளித்த பொறுப்புகளிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.
பல மாதங்களாக, அவர்களின் சுமை என் தோள்களில் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு உணவும், இரவில் ஒவ்வொரு அமைதியான கண்ணீரும் - நானே தாங்கி, குணப்படுத்தி, சுமந்து சென்றேன். ஒரு காலத்தில் அவர்களை தனது பெருமை என்று அழைத்தவரிடமிருந்து இப்போது எந்த பதிலும் இல்லை.
நாங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதை இப்போது எதிர்கொள்கிறோம் - ஒரு காலத்தில் என்னுடன் அந்த வீட்டைக் கட்டியவராலேயே வெளியேற்றப்படுகிறோம். நான் ஒரு பணத்தை தேடுபவள் என்று குற்றம் சாட்டப்படுகிறேன். அது எப்போதாவது உண்மையாக இருந்திருந்தால், நான் நீண்ட காலத்திற்கு முன்பே என் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்திருப்பேன். ஆனால் அதை தவிர்த்து அன்பைத் தேர்ந்தெடுத்தேன், பணத்தை விட நம்பிக்கையை தேர்ந்தெடுத்தேன். அது என்னை இங்கு கொண்டு வந்துவிட்டது. காதலித்தற்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அந்த காதல் பலவீனமாக கூறப்படுவதால் நான் ஒதுங்கி நிற்க மாட்டேன்.
இறுதியில், “இது பழிவாங்கல் அல்ல. இது ஒரு காட்சி அல்ல. இது ஒரு தாய் நெருப்பில் அடியெடுத்து வைப்பது - சண்டையிட அல்ல, பாதுகாப்பதற்காக” என்று கூறியிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ