Maanagaram Actor Sri Current Whereabouts : வெகு சில தமிழ் திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஹீரோவாக வலம் வந்தவர், நடிகர் ஸ்ரீ. இவரது முழு பெயர் ஸ்ரீராம் நடராஜன். படங்களில் கம்பீரமான தோற்றத்துடன் காணப்பட்ட இவர், சமீப காலங்களாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வீடியோக்கள் மற்றும் போட்டோக்களில் உடல் எடை மெலிந்து காணப்பட்டார். இவர் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கம்பீரமானவருக்கு நேர்ந்த நிலை..
பொதுவாக, திரையுலகிற்குள் ஒருவர் வந்து விட்டாலே, அவர்களுக்கு கிடைக்கும் பணமும்-புகழும் அவர்களை மாற்றிவிடும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒரு சில சமயங்களில் சினிமாவில் ஏற்படும் தோல்விகளும் அவர்களை மாற்றிவிடும். நடிகர் ஸ்ரீயும், இப்போது அந்த நிலைமையில்தான் இருக்கிறார்.
வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீ, மிஷ்கின் இயக்கி நடித்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்திலும் முக்கிய கேரக்ர்டரில் நடித்திருந்தார். சோன் பப்டி, வில் அம்பு உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றிபெறவில்லை என்றாலும், அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வைத்தன.
லோகேஷ் கனகராஜ், முதன்முதலாக இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படத்தில் நடித்திடிருந்த ஸ்ரீ, அதன் பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்து இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, இவரை ஆளையே காணவில்லை. இவர் குறித்து யாரும் பெரிதாக தேடவும் இல்லை.
ஆளே மாறிப்போன ஸ்ரீ!
நடிகர் ஸ்ரீ, தலையில் ஆரஞ்சு கலர் டை அடித்துக்கொண்டு, அறை நிர்வாணத்துடன் இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக தொடங்கின. சட்டையற்று இருந்த அவர், உடல் எடை மெலிந்து எலும்பும்-தோலுமாக காணப்பட்டார்.
ஸ்ரீயின் இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாக ஆரம்பித்தது. இதையடுத்து திரை பிரபலங்களை டேக் செய்த பலர் ஸ்ரீயை கண்டு பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஸ்ரீ, தான் நடித்த வில் அம்பு மற்றும் இறுகப்பற்று ஆகிய படங்களுக்கு பேமண்ட் கிடைக்கவில்லை என்று போட்டிருந்த போஸ்ட்கள், இணையத்தில் வைரலானது.
இப்போது எங்கிருக்கிறார்?
ஸ்ரீக்கு, திரைத்துறையில் சில நண்பர்கள் இருக்கின்றனர். இவர்கள், அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், அவர் யார் போனையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அவர், தற்போது சென்னையில் இல்லை என்றும், ஹரியானாவில் இருக்கும் குர்கானில் அவரது லொகேஷன் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இவருக்கு மனச்சிதைவு நோய் (Schizophrenia) இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு யாரோ பேசுவது போலவும், யாரும் இல்லாத ஒரு இடத்தில் யாரோ இருப்பது போலவும் தோன்றுமாம்.
இவர் நடித்த சில படங்களுக்கான சம்பளத்தை இவர் பெறவில்லை என்றும், இவரை விரைவில் கண்டுபிடித்து, மீட்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எப்படியாது நடிகர் ஸ்ரீயை மீண்டும் பழைய நிலையில் பார்க்க வேண்டுமென அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்த தகவல்களை, ஸ்ரீயின் நண்பர் சமீபத்தில் ஒரு நேர்காணல் மூலம் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க | ஆளே மாறிப்போன பிரபல நடிகர் ஸ்ரீ! இதுதான் காரணமா? அவரே போட்டிருக்கும் பதிவு..
மேலும் படிக்க | நடிகர் ஸ்ரீயின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணமா? தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









